புதுக்கோட்டை, மே 1 - ‘இளைஞர்களுக்கு வேலை கொடு’ என்கிற முழக்கத்தை முன் வைத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நடத்திய மாபெரும் சைக்கிள் பேரணிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. படித்து முடித்து வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் அனை வருக்கும் வேலை வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தமிழகத்தின் நான்கு முனைகளில் இருந்து சைக்கிள் பேரணியை நடத்தி னர். இராமநாதபுரத்திலிருந்து வந்த பேரணிக்கு வாலிபர் சங்கத்தின் புதுக் கோட்டை மாவட்டச் செயலாளர் துரை.நாராயணன் தலைமை வகித்தார். புதுக்கோட்டை மாவட்ட எல்லை யிலிருந்து அழைத்து வரப்பட்ட பேர ணிக்கு திருமயம், நமணசமுத்திரம், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சி.ஜீவானந்தம், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.நாகரா ஜன், தமுஎகச மாவட்டச் செயலாளர் சு.மதியழகன், உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.