districts

img

புதுக்கோட்டையில் 29,77,026 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன: ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை, ஏப்.11- புதுக்கோட்டை மாவட் டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 29,77,026 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக புதுக்  கோட்டை மாவட்ட ஆட்சியர்  கவிதா ராமு தெரிவித்துள் ளார். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் செவ்வாய்க் கிழமை கொரோனா சிகிச்சை  முறைகள் குறித்த ஒத்திகை யை ஆய்வு செய்த பின்னர் அவர் தெரிவித்ததாவது: கொரோனா தொற்று பர வல் அதிகரித்து வரும் சூழ லில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில், கொரோனா சிகிச்சை முறைகள் மற்றும்  தயார் நிலை குறித்த ஒத்தி கைப் பயிற்சி நடத்தப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத் தில் 14,12,207 கொரோனா முதல் தவணை தடுப்பூசி கள், 13,78,358 இரண்டாம் தவணை தடுப்பூசிகள் மற்  றும் 1,86,461 முன்னெச்ச ரிக்கை நடவடிக்கை தடுப்பூ சிகள் என மொத்தம் 29,77, 026 தடுப்பூசிகள் போடப்பட் டுள்ளன.  மேலும், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக மாவட்டம் முழுவதும் 1,630 படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும்  நாள் ஒன்றுக்கு 1,800 பரி சோதனைகள் மேற்கொள் ளும் வகையில் 4,664 ஆர்.டி. பி.சி.ஆர் உபகரணங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.  கொரோனா சிகிச்சை மேற்கொள்வதற்காக 181  மருத்துவர்களும், 285 செவி லியர்களும், 12 மருத்துவ உதவியாளர்களும், வென்டி லேட்டர் பயிற்சி பெற்ற 40  நபர்கள் மற்றும் 110 வென்டி லேட்டர்கள், 23 ஆக்ஸிமீட்டர் கருவிகள், 148 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள், 549 ஆக்சிஜன் உருளைகள், திரவ ஆக்சிஜன் 4 கொள் கலன்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஆட்சியர் தெரி வித்தார். இந்நிகழ்வில், அரசு மருத்துவக் கல்லூரி முதல்  வர் பூவதி, இணை இயக்கு நர் (பொ) (மருத்துவப் பணி கள்) ராதிகா, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இருக்கை மருத்துவர் இந்தி ராணி, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) ராம் கணேஷ், வட்டாட்சியர் விஜயலெட்சுமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண் டனர்.