கடல்நீர் மட்ட உயர்வு கடலோர மீன்வளர்ப்பை அழிக்கும்
கடல்நீர் மட்டத்தின் அதிகரிப்பு ஆஸ்திரேலி யாவின் கடலோர மீன்வளர்ப்பை அழிக்கக்கூடும் என்று எச்சரித்து ஒரு புதிய ஆய்வு வெளிவந்துள்ளது. குறிப்பாக 43 சதவீதத்திற்கும் அதிகமாக மிகப்பெரிய அளவில் மீன்வளர்ப்பு மற்றும் உற்பத்தி செய்யும் குயின்ஸ்லாந்து மாகாணம் அதிகளவு தாக்கத்தை அனுபவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 2100 இல் ஒரு ஆண்டுக்கு 36.9 மில்லியன் ஆஸ்திரே லிய டாலர்கள் முதல் 127.6 மில்லியன் ஆஸ்தி ரேலிய டாலர்கள் வரை இழப்பு ஏற்படும் என எச்ச ரிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகப் போரில் யாரும் வெல்லப்போவதில்லை – குட்டரெஸ்
“வர்த்தகப் போரில் யாரும் வெற்றி பெற மாட்டார்கள்” என்று ஐ.நா பொதுச்செய லாளர் அந்தோணியோ குட்டரெஸ் எச்ச ரித்துள்ளார். மேலும் இந்த வரிகளால் ஏற்படும் அழுத்தத்தை சமாளிக்க போதிய வளர்ச்சி இல்லாத நாடுகளை குறித்து கவலைப்படுவ தாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அவரது செய்தித் தொடர்பாளர் வெள்ளிக்கிழமை யன்று தெரிவித்தார். உலக நாடுகளின் எதிர்ப்பை யும் மீறி அனைவர் மீதும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் “பரஸ்பர வரிகளை” விதித் துள்ளார்.
உலகமயமாக்கல் பொருளாதாரம் முடிவுக்கு வந்தது – ஸ்டார்மர்
நாட்டு மக்களுக்கு இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் ஆற்றிய உரையில் உலக மயமாக்கல் கோடிக்கணக்கான மக்களிடையே தோல்வியடைந்து விட்டது என தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விதித்துள்ள பரஸ்பர வரிகள், வர்த்தகப் போர், அமெரிக்காவே முதன்மை போன்ற கொள்கைகளால் உலகப் பொருளாதாரம் மோசமான நெருக்கடியை நோக்கிச் செல்லும் நிலையில் உலகமயமாக்கல் பொருளாதாரம் தோல்வியடைந்து விட்டது என அவர் அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக மொராக்கோவில் போராட்டம்
காசா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் கொடூரமான தாக்குதல்களுக்கு எதிராக மொராக்கோ மக்கள் போராட்டம் நடத்தினர். அந்நாட்டின் ரபாத் நகரத்தில் ஆயி ரக்கணக்கில் கூடிய மக்கள் பாலஸ்தீனக் கொடிகளை ஏந்தி இஸ்ரேலுக்கு எதிராக கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட் டத்தில் காசா பகுதியை முற்றுகையிட்டு இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும். போதிய நிவாரண உதவிகளை அனு மதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அமெ. துணை ஜனாதிபதி ஏப்.21இல் இந்தியா வருகை
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் 4 நாள் பயணமாக இந்தியா வர உள்ளார். ஏப்.21 அன்று அவரது மனைவி உஷா இதை உறுதி செய்துள்ளார். டிரம்ப் உலக நாடுகளுடன் வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ள நிலையில் வான்ஸ் தொடர்ந்து வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த பயணத்தில் அமெரிக்காவுடனான பொருளாதார உறவுகள் குறித்தும்,அமெரிக்கப் பொருட்களுக்கு அந்நாடுகள் விதித்துள்ள வரிகளை குறைப்பது பற்றியும் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
டிரம்ப் விதித்துள்ள வரிகள் சீனாவிற்கு சாதகமான சூழலையே கொடுக்கும்: பொருளாதார நிபுணர் கருத்து
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உலக நாடு களின் மீது விதித்து வருகின்ற வரிகள் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பொருளாதாரத் தவறு. அனைத்து நாடுகளுக்கும் வரிகளை விதிப்பதன் மூலம், தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு ஒட்டு மொத்த உலகப் பொருளாதாரத்தையும் சீனாவிற்கு வழங்குகிறது என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பரஸ்பர வரிகள் என்ற பெயரில் டிரம்ப் இந்தியப் பொருட்களின் இறக்குமதிக்கு 27 சதவீதம், சீனா வுக்கு 34 சதவீதம், வங்கதேசத்திற்கு 37 சதவீதம், வியட்நாமுக்கு 46 சதவீதம், ஐரோப்பிய ஒன்றியத்தி ற்கு 20 சதவீதம் என வரிகளை அறிவித்துள்ளார். இந்த வரிகள் ஏப்ரல் 9 க்கு பிறகு அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சீனா அமெரிக்கப் பொருட்க ளுக்கு சுமார் 34 சதவீதம் வரை வரி விதித்து பதிலடி கொடுத்துள்ளது. இந்நிலையில் தான் டொனால்டு டிரம்ப் “உல கப் பொருளாதாரத்தை தங்கத் தட்டில் வைத்து சீனா விடம் ஒப்படைத்துவிட்டார்” என இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் முன் னணி பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஜோஸ்டீன் ஹாகே தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த உலக நாடுகளில் உள்ள நுகர்வோரில் வெறும் 4.3 சதவீதம் மட்டுமே அமெரிக்காவில் உள்ளனர். அப்ப டிப்பட்ட அமெரிக்கா, வரி விதிப்புகள் மூலம் தனது எல்லையைச் சுருக்கிக் கொண்டு தனக்குத் தானே ஒரு தடையை உருவாக்கிக் கொண்டு மீதமுள்ள 95 சதவீதத்துக்கும் அதிகமான நுகர்வோர்கள் உள்ள நாடுகளை தங்களுக்குள்ளாகவே பொருளா தார உறவுகளை அதிகரித்துக்கொள்ள நிர்பந்தித் துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் “சீனாவின் கதவுகள் இன்னும் அகலமாகவே திறக்கும்,” என்று அந்நாட்டின் ஜனாதி பதி ஜிஜின்பிங் இரண்டு நாட்களுக்கு முன் குறிப் பிட்டுள்ளார். சீனாவின் வளர்ச்சியை கையாள்வதில் ஜோ பைடன் நிர்வாகம் செய்த அதே தவறை தான் டிரம்ப்பும் செய்துள்ளார். சீனாவின் தொழில்நுட்ப பொ ருளாதார வளர்ச்சியை முடக்க பைடன் அரசு சிப் மற்றும் சிப் உற்பத்திக்கான பொருட்கள் மீது தடை விதித்தது. ஆனால் சீனா அதை தன்னுடைய சவாலாக எடுத்துக்கொண்டு அதிக முதலீடு செய்து சிப் உற் பத்தியில் அசுர வளர்ச்சியைக் கொடுத்தது. இந்த வரிகள் உடனடியாக சீனாவின் பொருளா தாரத்தை பாதிக்கும் என்று கூறினாலும் சீனா அதி லிருந்து விரைவில் மீண்டு விடும் எனவும் தெரி விக்கப்பட்டுள்ளது. ஏனெனில் உலகில் உள்ள 20 பேரில் ஒருவர் மட்டுமே அமெரிக்காவில் உள்ளார். அமெரிக்கா வை தவிர்த்துவிட்டு பார்த்தால், அதனை விட பெரிய சந்தையாக பிற நாடுகள் இணைந்து பொருளாதார உறவுகளை வளர்க்க முடியும் என கூறப்படுகின்றது.