வக்பு சொத்துகளின் கட்டுப்பாடு இனி நாக்பூரில்! - நர்மதா தேவி
இந்துத்துவா ராஜ்ஜியத்தில் இஸ்லாமியர்களை எந்த நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கருத்தியலை வடி வமைத்த எம்.எஸ்.கோல்வால்கர் ‘நாமும், நம்முடைய வரையறுக்கப்பட்ட தேசமும்’ என்ற நூலில் இவ்வாறு முன்வைக்கிறார்: “இந்தியாவில் அந்நியர்களாக இருப்பவர்களுக்கு (இஸ்லாமியர்களுக்கு) இரு மார்க்கங்கள் மட்டும்தான் வெளிப்படையாக இருக்கின்றன. ஒன்று, அவர்கள் தேசிய இனத்துடன் (இந்துக்கள்) முழுமையாக இணைந்து, அவர்களின் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லது, தேசிய இனம் அவர்களைத் தொடர்ந்து இருப்பதற்கு அனுமதிக்கும் வரையில், தேசிய இனத்தவர் அவர்க ளை நாட்டை விட்டு வெளியேறிட வேண்டும் என்று சொல்லும் வரையில் அவர்களது கருணையின் கீழ் வாழ்ந்து கொள்ள வேண்டும்.” இந்த அணுகுமுறையின் அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு கோல்வால்கர் வகுத்துத்தந்த இந்துத்துவ வேலைத் திட்டத்தைத்தான் இன்றைக்கு பாஜக வேகவேகமாக அமலாக்கி வருகிறது. அந்த நிகழ்ச்சி நிரலில் முக்கியமான ஒன்றுதான் 2025 வக்பு வாரிய திருத்தச் சட்டம். ஏப்ரல் 8 ஆம் தேதியில் இருந்து இந்தச்சட்டம் அமலுக்கு வந்துவிட்டது. வக்பு வாரிய திருத்தச் சட்டமானது, பாஜக ஆர்.எஸ்.எஸ் சங்பரிவாரங்கள் ஒவ்வொரு மசூதியாக, ஒவ்வொரு இஸ்லாமிய மதவழிபாட்டுத் தளமாக குறிவைத்து, நீதிமன்றம் வாயிலாக நாடகங்களை அரங்கேற்றிக் கைப்பற்றும் வேலையை எளிதாக்குகிறது. இந்தச் சட்டத்தை எதற்காக கொண்டுவந்துள்ளோம் என்று பாஜக ஒரு கதையை அளந்துவருகிறது. இந்தியாவில் இஸ்லாமியர்களின் நிலையை ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட ராஜேந்திர சச்சார் கமிட்டி, “வக்பு வாரி யச் சொத்துகளை இஸ்லாமிய தனிநபர்கள் ஆக்கிர மித்து வருகிறார்கள். அதைத் தடுப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியது; “நாங்கள் அந்த வலியுறுத்தலின் படியே வக்பு வாரியச் சொத்துகளை ஆக்கிரமிப்பு களில் இருந்து பாதுகாக்கும் நல்லெண்ணத்தில் இந்தச் சட்டத்தைக் கொண்டு வருகிறோம்’ என்று கூறுகிறது. ஆனால், அதே சச்சார் கமிட்டி, கோடிக்க ணக்கான இஸ்லாமிய மக்களின் வாழ்நிலை எவ்வ ளவு மோசமாக உள்ளது என்று விரிவாக பேசியி ருப்பதை, வசதியாக மறந்து விட்டது.
புதிய வக்பு வாரியச் சட்டத் திருத்தங்களின் அம்சங்கள்
1. வக்பு வாரியங்களில் இஸ்லாமியர் அல்லாதவர் இடம் பெறலாம். வக்பு கவுன்சிலில் இடம்பெறும் எம்.பி,க்கள், முன்னாள் நீதிபதிகள் போன்றவர்கள் இஸ்லாமியர்க ளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
2. வக்பு சொத்துகளை ஆய்வு செய்து உறுதி செய்யும் அதிகாரம் வக்பு வாரியத்திடம் இருந்து பறிக்கப் படுகிறது.
3. வக்பு சொத்துகளை கணக்கெடுப்பதற்கான உரிமை வக்பு ஆணையரிடம் இருந்து பறிக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியருக்கு மாற்றப்படுகிறது. ஆக்கிரமிப்பு தொடர்பான சர்ச்சைகளில் மாவட்ட ஆட்சியரின் ஆய்வும், உத்தரவுமே இனி இறுதியானது.
4. வக்பு சொத்துகளில் வக்பு தீர்ப்பாயத்தின் முடிவே இறுதியானது என்கிற முந்தைய அம்சம் நீக்கப்பட்டுவிட்டது. மேல்முறையீட்டுக்கு உயர் நீதிமன்றத்தை 90 நாட்களில் நாடலாம்.
5. வக்பு சொத்துகளை பதிந்து வழங்காமல், வாய்வழி யாகவே மதப்பயன்பாட்டுக்காக வழங்கிடும் (Waqf by declaration) முறையும், பயன்பாட்டின் வாயிலாக வக்பு சொத்துகளை மதக்காரியங்களு க்குப் பயன்படுத்தும் (Waqf by User) முறையும் நடை முறையில் இருந்துவந்தன. இந்தச் சொத்துகள் வக்பு சொத்தாக பதியப்படாவிட்டாலும், அவை வக்பு சொத்துகளாகவே கருதப்பட்டு, பயன்படுத் தப்பட்டு வந்தன. புதிய சட்டம் 2025 Waqf by User, Waqf by declaration ஆகிய பிரிவுகளை யே ரத்து செய்கிறது.
6. ஒருவர் மதத்தொண்டுக்காக வக்பு சொத்தை கொடை யாக வழங்கிட, குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் இஸ்லாம் மதத்தை அவர் பின்பற்றி இருக்க வேண்டும்.
என்ன விளைவுகள்?
முந்தைய வக்பு சட்டமானது வக்பு சொத்துக் களை இஸ்லாமிய அறக்கட்டளைகள் முறையாக நிர்வ கிப்பதற்கு அவசியமான சட்டரீதியான அம்சங்களை உறுதிசெய்தது. வக்பு சொத்துகளை முறையாக நிர்வாகம் செய்யவும், பாதுகாத்திடவும், மதத் தொண்டு நோக்கங்களுக்காக அவை பயன்படுத்தப் படுவதை உறுதி செய்யவும், தேவையான சட்டப் பாதுகாப்பையும் உரிய வழிகாட்டுதல்களையும் வழங்கியது. திருத்தப்பட்ட வக்பு சட்டமோ, பாஜக, ஆர்.எஸ்.எஸ் சங்பரிவாரங்கள் வக்பு சொத்துகளைக் கைப்பற்றி மதவெறி அரசியல் செய்வதற்கு சட்ட ரீதியிலான ஏற்பாடுகளைச் செய்துகொடுக்கிறது. இஸ்லாமியர் அல்லாதவர்கள் வக்பு சொத்துக் களை நிர்வகிக்க முடியாது என்பது மதநம்பிக்கை சார்ந்து இஸ்லாம் விதிக்கும் விதிகளில் முக்கியமா னது. எல்லோராலும் எளிமையாகப் புரிந்து கொள்ளக் கூடிய நியாயமான இந்த விதியை பாஜக அரசு மாற்றி விட்டது. புதிய திருத்தங்களின்படி, இனி இந்தியாவி லேயே மிகப்பெரும் இஸ்லாமிய வெறுப்பாளர்களாக இருக்கக்கூடிய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் போன்ற நபர்கள்கூட வக்பு வாரியங்களில் இடம் பெற முடியும். வக்பு சொத்து நிர்வாகத்தில் மூக்கை நுழைத்திட முடியும். இந்த அம்சம் இஸ்லாமியர்கள் தங்கள் மதத்தை பின்பற்றுவதற்கு இந்திய அரசியல மைப்புச் சட்டம் உறுதிசெய்துள்ள உரிமை மீதான அப்பட்டமான தாக்குதலாகும். வக்பு சொத்தின் கணக்கெடுப்பில், ஆய்வில், நிலத் தகராறுகள் குறித்த விசாரணையில், ஒட்டுமொத்தமாக வக்பு சொத்துகளின் மேலாண்மையில் இனி மாவட்ட நிர்வாகம், வருவாய்த் துறை தலையிடும் என்கிற புதிய அம்சம் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். உண்மையில் மாவட்ட நிர்வாகம், ஆட்சியாளர், வரு வாய்த் துறை அதிகாரிகள் என்கிற போர்வையில் ஆட்சி யில் இருக்கும் பாஜகவும், அதன் குருபீடமான ஆர்.எஸ்.எஸ் அமைப்பும்தான் வக்பு சொத்துகளை இனி தீர்மானிக்கப் போகின்றன என்பது வெளிப்படை. அயோத்தி பாபர் மசூதி நாடகத்தை முப்பதாண்டுக ளுக்கும் மேலாகப் பார்த்துவரும் எந்தவொரு மதச் சார்பற்ற இந்தியக் குடிமக்களும் இதன் விளைவு களை நன்கறிவார்கள். Waqf by declaration, Waqf by user பிரிவு களை ரத்து செய்வதால் பல்வேறு சர்ச்சைகளும், பிரச்ச னைகளும் வெடிக்கும். ஏனெனில், இதுவரை மசூதி, கல்லறை உள்ளிட்ட மதத்தோடு தொடர்புடைய இடங்கள், சொத்துகள் முறையாக வக்பு சொத்துகள் என்று அறிவிக்கப்படாவிட்டாலும், அவை Waqf by declaration, Waqf by user அடிப்படையில் வக்பு சொத்துகளாகவே இதுவரை கருதப்பட்டு, பயன் படுத்தப்பட்டு வந்தன. ஆனால் புதிய சட்டம் இவற்றை இனி வக்பு சொத்தாகவே கருதாது. பதியப்பட்ட சொத்து களே வக்பு சொத்துகளாக கருதப்படும் என்கிறது. மீண்டும் பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப எந்தவொரு மசூதியும், தர்கா வும் வக்பு சொத்தே இல்லை என்று சர்ச்சைக்கு உள் ளாக்கப்படலாம். நாட்டில் உள்ள வக்பு சொத்துக்களில் பெரும்பாலானவை-வாய்மொழியாகவோ அல்லது பயன்பாட்டின் மூலமாகவோ அறிவிக்கப்பட்டவை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த இஸ்லாமிய சொத்துகள் இனி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டு ஆளும் பாஜக அரசாங்கங்களால் சட்டப்படியாகவே ஆக்கிரமிக்கப்படலாம். குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளாக ஒருவர் இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றி வருவதை நிரூ பித்தால் மட்டுமே, அவரால் வக்பு சொத்துகளை வழங்கிட முடியும் என்கிற திருத்தம் படுமோசமா னது. மதம் மாறியவரின் மதநம்பிக்கையை ஐந்தாண்டு காலம் என்ற விதியின் மூலம் பரிசோ திக்கும் உரிமையை பாஜக அரசாங்கத்திற்கு யார் கொடுத்தது என்கிற கேள்வியை இந்த விநோதமான விதி எழுப்புகிறது. இந்த அம்சம் கொடையாளர்களை துன்புறுத்துவதற்கு சட்டப்படியாகவே இடமளிக்கிறது. இந்த அம்சத்தைப் பயன்படுத்தி வக்பு சொத்துக் களை உருவாக்குவதை அரசால் தடுத்திட முடியும். இஸ்லாமியர்கள் அல்லாத கொடையாளர்களும் காலம் காலமாக வக்பு சொத்துகளை உருவாக்கு வதற்குப் பங்களித்து வந்துள்ளனர். மதம் கடந்த சகோ தரத்துவத்தின் வெளிப்பாடான இந்த வழக்கங்களைப் புதிய வக்பு திருத்தங்கள் தடுக்கின்றன. உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதே சம், கர்நாடகா மற்றும் கேரளா போன்ற மாநிலங்கள் அதிக வக்பு சொத்துக்களைக் கொண்ட மாநிலங்க ளாக இருக்கின்றன. 2025 வக்பு சட்டத்தால் இந்த மாநிலங்களில் சங்பரிவாரங்களின் ஆட்டம் அதிகரிக்கும். நீண்டகால பயன்பாட்டின் மூலம் வரலாற்று ரீதியாக நிறுவப்பட்ட ஆயிரக்கணக்கான வக்பு சொத்துக்களை உடனடியாகப் பதிவு செய்ய வேண்டும் என்கிற புதிய ஆணை, வக்பு சொத்துகளை அரசாங்கம் பறிமுதல் செய்யப் போகிற ரகசியத் திட்டத்தை அம்பலப் படுத்துகிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால், இனி வக்பு வாரியங்கள் என்பவை பெயரளவில் மட்டுமே இருக்கும்; வக்பு சொத்துகள் மீதான உண்மை யான கட்டுப்பாடு நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் தலைமை யகத்தில் இருக்கும். இந்த நிலையைத்தான் 2025 வக்பு திருத்தச் சட்டம் உருவாக்கியுள்ளது.