புதுக்கோட்டை, ஜன.6- புதுக்கோட்டையில் 50 படுக்கைகள் கொண்ட சித்த மருத்துவமனை விரைவில் தொடங்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார். 6-வது தேசிய சித்த மருத்துவ தினத்தினை முன்னிட்டு, புதுக்கோட்டை சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் இலவச சித்த மருத்துவ முகா மினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வெள்ளி யன்று துவக்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், ‘‘சித்த மருத்துவ முறை யின் மீது பொதுமக்களுக்கு ஆர்வம் இருக்கிறது. மேலும் பொதுமக்கள் அனைவரும் சித்த மருத்துவத்தின் அவசி யத்தை கொரோனா பேரிடர் காலத்தில் உணர்ந்ததன் அடிப்படையில், அனைவரும் கபசுர குடிநீரை பயன்படுத் தினர். சித்த மருத்துவத்தின் பயன்பாடு பொதுமக்களுக்கு அதிக அளவில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் புதுக்கோட்டையில் 50 படுக்கை வசதிகள் கொண்ட சித்த மருத்துவமனையை விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள் ளப்படும்’’ என்றார். சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, நகர் மன்றத் தலைவர் திலகவதி செந்தில், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மரு.எம்.வனஜா, அலுவலர் மரு.எல்.ரெங்கநாயகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.