tamilnadu

வாச்சாத்தி போராளிகளுக்கு செவ்வணக்கம்!

வாச்சாத்தி போராளிகளுக்கு செவ்வணக்கம்!

மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி யின் 24-ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில், ஏப்ரல் 2-ஆம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 6 அன்று மாபெரும் செந் தொண்டர் அணிவகுப்பு - பொதுக் கூட்டத்துடன் நிறைவடைந்தது.  செந்தொண்டர் அணிவகுப்பில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளை ஞர்கள் திரண்டனர். பாண்டி கோயில் எல்காட் அருகிலிருந்து புறப்பட்ட இந்த அணிவகுப்பை வாச்சாத்தி போ ராளிப் பெண்களான ஜெயா (48), அமரக்கா (51), முத்துவேடி (51), சரோஜா (52) பழனியம்மாள் (53),  மல்லிகா (51), செல்வி (49), காந்தி மதி (51), காந்தி (50), பாப்பாத்தி (53), சித்ரா (52), மற்றொரு பாப் பாத்தி (53), தேன்மொழி (53), லட்சுமி  (50, பூங்கொடி (52), மாரி (49), சுகுணா (52), கம்சலா (52) ஆகி யோர் செங்கொடியை அசைத்துத் துவக்கி வைத்தனர். போராளிகளில் சித்ரா, தேன் மொழி ஆகியோர் தவிர்க்க இயலாத காரணங்களால் வரவில்லை. அவர்களுக்குப் பதில் பரந்தாயி (80), வெள்ளாயி (75) ஆகியோர் பங்கேற்றனர்.  இவர்கள் அனைவரும், 33  ஆண்டுகளுக்கு முன்பு, வனத் துறை, வருவாய்த்துறை, காவல் துறை என அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர்களால், பல்வேறு வகை களிலும் பாலியல் ரீதியாகவும், பல வகைகளிலும் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மலைக்கிராமப் பெண்கள். எனினும், சிபிஎம் தலை மையில் அதிகார வர்க்கத்திற்கு எதிராக 30 ஆண்டுகளாகப் போராடி, நீதித்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், 215 பேருக்கு சிறைத்தண்டனை பெற்றுக் கொ டுத்தவர்கள். போராடினால், நீதியை நிலை நாட்ட முடியும்; அதிகார வர்க்கத்தை எதிர்கொள்ள முடியும் என்பதற்கு உதாரணமாக திகழ்பவர்கள். அவர் கள் செந்தொண்டர் அணிவகுப் பைத் துவக்கி வைத்தது, 24-ஆவது அகில இந்திய மாநாட்டின் சிறப்பா கும். உணர்ச்சிகரமான நிகழ் வாகும்.