புதுக்கோட்டை, ஆக.4 - புதுக்கோட்டை புத்தகத் திருவிழா வில் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங் களை வாங்கிக் கொடுத்து அசத்திய அதி காரி அனைவரின் பாராட்டையும் பெற் றுள்ளார். புதுக்கோட்டை மாவட்டமும், தமிழ் நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து 5-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திரு விழாவை ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 7 வரை நடத்தி வருகிறது. புத்தகத் திரு விழாவிற்கு தினந்தோறும் பல நூற்றுக் கணக்கான எழுத்தாளர்கள், வாசகர் கள் வருகைதந்து ஏராளமான புத்தகங் களை வாங்கிக் செல்கின்றனர். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பள்ளிகள், கல்லூரிகள், உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக புத்தகங்கள் வாங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு அதிகாரி ஒரு வர், தனது சொந்த நிதியில் இருந்து பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்களை வாங்கி பரிசளித்த நிகழ்வு பெரும் வர வேற்பை பெற்றுள்ளது. புதுக்கோட்டை கோட்டாட்சியராக பொறுப்பு வகிப்பவர் கி.கருணாகரன். மாவட்ட ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலராகவும் உள்ளார். இவர் தனது துறையின் கீழ் உள்ள கறம்பக்குடி தாலுகா முள்ளங்குறிச்சி அரசு ஆதிதிரா விடர் நல மேல்நிலைப் பள்ளி மற்றும் பிளாவிடுதி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளிகள் வருகின்றன. மேற்கண்ட பள்ளி மாணவர்களை வியாழக்கிழமை வரவழைத்த அதிகாரி கி.கருணாகரன், தனது சொந்த நிதி யில் இருந்து ரூ.20 ஆயிரம் மதிப்பில் புத்தகங்களை வாங்கி அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக் கும் பரிசாகக் கொடுத்து அசத்தினார். நிகழ்வில் கறம்பக்குடி வட்டாட்சியர் ராமசாமி, தலைமை ஆசிரியர்கள் தமிழ்ச்செல்வி, சிங்காரவேலு, புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.டி.பாலகிருஷ்ணன், எம்.வீர முத்து, எம்.முத்துக்குமார், அறிவியல் இயக்க நிர்வாகிகள் உடனிருந்தனர். மேலும், அதிகாரி கருணாகரன் புத்தகத் திருவிழா சிறப்பாக நடை பெறுவதற்கு பல வகையிலும் உதவி புரிந்து வருகிறார். இவரின் செயல்பாடு களை புத்தகத் திருவிழா ஒருங்கிணைப் பாளர்கள், பதிப்பகத்தார்கள், வாசகர் கள் பாராட்டி வருகின்றனர்.