பொன்னமராவதி, மார்ச்.10- பொன்னமராவதியில் ஒருங் கிணைந்த பள்ளிக் கல்வித்துறை யின் சார்பில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் பொன்புதுப்பட்டி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட முதன் மைக்கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி தலைமை வகித் தார். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி தொடங்கி வைத்தார். முகாமில் பொன்னமராவதி வட்டார வளமையத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள 18 வயது வரை உடைய 100 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் எஸ்.தங்கமணி, மாவட்ட உதவி திட்ட ஒருங்கி ணைப்பாளர் ஜெ.சுதந்திரன், பொன்-புதுப்பட்டி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி தலை மையாசிரியர் நிர்மலா உள்ளிட் டோர் பங்கேற்றனர்.