districts

சுதா சுந்தர்ராமன் தந்தையார் காலமானார்

புதுச்சேரி. பிப்,14 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், புதுச்சேரி மாநில செயற்குழு உறுப்பினருமான தோழர் சுதாசுந்தரராமன் அவர்களின் தந்தையார் சுந்தரம் (வயது 94) காலமானார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சுந்தரம் சிகிச்சை பலனளிக்காமல் செவ்வாய்கிழமை (பிப்-14) காலமானார். புதுச்சேரி மூலகுளம் திருநகரில் உள்ள அன்னரது இல்லத்தில்  வைக்கப்பட்டிருந்த உடலுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி,ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம், மூத்ததலைவர் முருகன்,செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள்,ராமச்சந்திரன்,தமிச்செல்வன்,சீனுவாசன்,பிரபுராஜ்,கொளஞ்சியப்பன்,கலியமூர்த்தி,சத்தியா மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பிரதேச தலைவர் முனியம்மாள், செயலாளர் இளவரசி உட்பட பலர்  நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.