புதுச்சேரி, டிச.9- செஞ்சி சாலை மீன் மார்க்கெட்டில் மின் இணைப்பு வழங்க கோரி கையெழுத்து இயக்கம் புதுச்சேரியில் நடை பெற்றது.
புதுச்சேரி ராஜ் பவன் தொகுதிக்கு உட்பட்ட செஞ்சி சாலை மீன் மார்க்கெட்டில் கடந்த 3 ஆண்டுகளாக மின்விளக்கு, மின்விசிறி இல்லாமல் மீன் வியாபாரம் செய்யும் பெண்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கழிப்பறை போதிய வசதி கள் இன்றி துர்நாற்றம் வீசு கிறது. இதனை போர்க்கால அடிப்படையில் புதுச்சேரி நகராட்சி சீரமைத்துத் தர வேண்டும். மின் இணைப்பு உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இவ்வியக்கம் நடைபெற்றது.
சிபிஎம் புதுச்சேரி பெருமாள் கோவில் கிளை மற்றும் நல்லாம் கிளினிக் கிளைகள் சார்பில் நடை பெற்ற இயக்கத்திற்கு ஸ்டாலின்,ஆனந்த் ஆகி யோர் கூட்டாக தலைமை தாங்கினர். நகர கமிட்டி செயலாளர் ஜோதிபாசு இயக்கத்தை துவக்கி வைத்தார். மாநிலக் குழு உறுப்பினர்கள் சரவணன், மதிவாணன், நகரக் குழு உறுப்பினர் மணவாளன் உட்பட பலர் பங்கேற்றனர்.