districts

img

பொள்ளாச்சியில் சிறுத்தை நடமாட்டம் - வனத்துறை நடவடிக்கை    

பொள்ளாச்சியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.  

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த புளியங்கண்டி பகுதியில்  தனியார் தோட்டத்தில் கட்டிவைத்துள்ள நாய் ஒன்று மர்மமான முறையில் இறந்துகிடந்தது. இதுகுறித்து தோட்டத்தின் உரிமையாளர் ரவி என்பவர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பொள்ளாச்சி வனச்சரக வனத்துறையினர், ரவி என்பவரின் தென்னை தோட்டத்தில் மர்ம விலங்கு நடமாட்டம் குறித்து கண்டறிய நான்கு கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளனர். இப்பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் இருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகித்துள்ளனர்.

கேமராக்களில் பதிவாகும் காட்சிகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.    

மேலும் இரவு நேரங்களில் இப்பகுதிகளில் யாரும் தனியாக வரவேண்டாம் என அப்பகுதி மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.