tamilnadu

img

குன்னூர் ராணுவப் பள்ளியில் சிறுத்தை நடமாட்டம் பொதுமக்கள் அச்சம்

குன்னூர்,பிப்.26- குன்னூரில் உள்ள ராணுவப் பள்ளி வளாகத்தில் சிறுத் தைப்புலி ஒன்று உலாவியதால் அப்பகுதிப் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள ராணுவப் பள்ளி வளாகத்தில் செவ்வாயன்று அதிகாலை சிறுத்தைப்புலி ஒன்று உலாவியது. இதனை அவ்வழியாக சென்ற பொது மக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அவர்கள் இது  குறித்து ராணுவ உயர் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்த னர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வை மேற்கொண்டனர்.  இந்நிலையில், அங்கிருந்த கால் தடங்களை ஆய்வு செய்ததில் சிறுத்தை புலியுடையது என  உறுதி செய்யப்பட் டது. இதனைத்தொடர்ந்து வனத்துறையினர் அப்பகுதி யிலுள்ள பொதுமக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.