districts

img

தேங்காய் எண்ணெய்க்கு விதிக்கப்பட்ட 18 விழுக்காடு ஜிஎஸ்டியை நீக்க கோரிக்கை

தேங்காய் எண்ணெய்க்கு விதிக்கப்பட்ட 18 விழுக்காடு ஜிஎஸ்டி வரியை நீக்குமாறு பொள்ளாச்சி தென்னை விவசாயிகள் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேங்காய் எண்ணெய்க்கு 5 விழுக்காடாக இருந்த ஜிஎஸ்டி வரி 18 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் எண்ணெய்க்கு 2 விழுக்காடு வரி குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த வரி உயர்வு தங்களை பெரிதும் பாதிக்கும் என்பதால், வரி உயர்வை நீக்க வலியுறுத்தி தென்னை உற்பத்தியாளர்கள் சங்க விவசாயிகள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.