districts

வியாசர்பாடியில் ரவுடிகள் அராஜகம்: 8 பேருக்கு அரிவாள் வெட்டு  

பெரம்பூர்,ஜன.11- வியாசர்பாடியில் ரவுடி கும்பல் ஒன்று சாலையோரத்தில் நின்ற வாகனங்களை நொறுக்கியும், பொதுமக்களை அரிவாளால் வெட்டியும் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். வியாசர்பாடி, பி.வி.காலனி, 18-வது தெருவில் செவ்வாயன்று இரவு இருசக்கரவாகனத்தில் 8 பேர் கும்பல் வந்தது. அவர்கள் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள்கள் அனைத்தையும் நொறுக்கினர். மேலும் கடைகள் மற்றும் கார், ஆட்டோக்களின் கண்ணாடிகளையும் உடைத்து சேதப்படுத்தினர். இதனை தடுக்க முயன்ற பொதுமக்களையும் அரிவாளை காட்டி மிரட்டினர். அருகே உள்ள ஒரு ஓட்டலில் மனைவியுடன் இருந்த வாலிபரிடம் பணம் கேட்டு மிரட்டினர். ஆனால் அவர் கெ?டுக்க மறுத்ததால் அவரை அரிவாளால் வெட்டினர். இதனை தடுக்க முயன்ற அந்த வாலிபரின் மனைவிக்கும் வெட்டு விழுந்தது. இதைத்தொடர்ந்து ரவுடி கும்பல் செங்குன்றம் நோக்கி சென்றனர். போகும் வழியெல்லாம் அவர்கள் வாகனங்களை சேதப்படுத்தி சென்றனர். இதனால் வியாசர்பாடி பகுதியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் எம்.கே.பி.நகர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து ரவுடி கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.