பெரம்பலூர், செப்.26 - மின்வாரிய ஊழியர்கள் பொறியாளர், அலுவலர்களின் பண பயன்களை, உரிமை களை பறிக்கக் கூடிய வாரிய ஆணை எண்.2-ஐ முழுமையாக ரத்து செய்ய வேண்டும். புதிய பதவிகளை அனுமதிக்க ஏற்கனவே உள்ள பதவிகளை ரத்து செய்யக் கூடிய மறுபகிர்வு முறை மற்றும் துணை மின் நிலையங்களை தனியாருக்கு கொடுக்கக் கூடிய அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் திங்கள்கிழமை மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டம் நடை பெற்றது. பெரம்பலூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற காத்தி ருப்பு போராட்டத்திற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு மாநில செயலா ளர் எஸ்.அகஸ்டின் தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் ஆ.பன்னீர்செல்வம், மாநில செயற்குழு உறுப்பினர் இளங்கோ வன், சம்மேளனம் ராமகிருஷ்ணன், பெரிய சாமி, அண்ணா தொழிற்சங்கம் இளங் கோவன், ஐக்கிய சங்கம் யு.சின்னசாமி, பொறியாளர் கழகம் வெங்டேஷ், பொறியா ளர் சங்கம் செந்தில் உள்பட சுமார் 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திருச்சிராப்பள்ளி
திருச்சி பெருநகர் வட்டக் கிளை தமிழ் நாடு மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மன்னார் புரத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத் திற்கு சிஐடியு மாநகர் மாவட்ட செயலா ளர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி தொழிலாளர் பொறி யாளர் ஐக்கிய சங்க ராஜமாணிக்கம், சிஐடியு செல்வராஜ், டிஎன்இபிஇஎப் சிவ.செல்வன், பொறியாளர் சங்க சங்கர்கணேஷ், பொறியா ளர் கழக சந்தானகிருஷ்ணன், சம்மேளனம் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பேசினர்.
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் மேற்பார்வை பொறியா ளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்திற்கு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு குழு தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். சிஐடியு சார்பில் எஸ்.கலைச் செல்வன், என்.வெற்றிவேல், ஆர்.செந்தில் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.