districts

தமிழக அரசின் ஓராண்டு சாதனையை விளக்கி பெரம்பலூரில் இன்று திமுக பொதுக்கூட்டம்

பெரம்பலூர், மே 14 - தமிழக அரசின் ஓராண்டு  சாதனை விளக்க பொதுக் கூட்டம், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்ப லூர், குன்னம் ஆகிய 2  தொகுதிகளில் நடைபெறு கிறது என பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் சி. இராஜேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  அந்த அறிக்கையில், “தமிழக அரசின் ஓராண்டு  சாதனைகளை விளக்கி, பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. 15.5.2022 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில், நெடுஞ் சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச் சர் எ.வ.வேலு, போக்கு வரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், தலைமை கழக பேச்சாளர் காரைக்குடி  கணேசன் சிறப்புரையாற்று கின்றனர். 18.5.2022 (புதன்கிழமை) அன்று குன்னம் ஊராட்சி யில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவ சங்கர், தலைமை கழக பேச்சாளர்கள் குத்தாலம்  கல்யாணம், அத்திப்பட்டு  காமராஜ் சிறப்புரையாற்று கின்றனர். இதில் அனை வரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என தெரி வித்துள்ளார்.