districts

ஜெயங்கொண்டத்தில் திமுக பொதுக்கூட்டம்

அரியலூர், ஏப்-10 மாநில அரசின் நிதிநிலை அறிக்கை, உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு நன்றி தெரி விக்கும் வகையில் திமுக பொதுக்கூட்டம் ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டச் செயலாள ரும் போக்குவரத்து துறை அமைச்சரு மான எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசிய தாவது: தமிழகத்தில் தேர்தல் அறிக்கையில் இல்லாத இல்லம் தேடி கல்வி மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றப்பட்டு வரு கிறது. பெண்கள் கல்வியில் முன்னேற் றம் அடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் எட்டாம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு திருமண உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படுகிறது என தெரிவித்தார். இதில், ஜெயங்கொண்டம் நகர்மன் றத் துணைத் தலைவர் கருணாநிதி வர வேற்புரையாற்றினார். அரியலூர் மாவட்  டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய பொறுப்பாளர்கள் அனைவரும் முன் னிலை வகித்தனர். தலைமை கழக பேச்சாளர் தக்கோலம் தேவபாலன், தமிழ் கொண்டான், ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர்.