பெரம்பலூர், மே 13 - அகில இந்திய விவசா யத் தொழிலாளர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட பேரவை கூட்டம் வியா ழனன்று துறைமங்கலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் எ.முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பி. ரமேஷ் வேலையறிக்கை வாசித்தார். அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்கத் தின் மாநில செயலாளர் ஏ.பழனிசாமி கோரிக்கை களை விளக்கி சிறப்புரை யாற்றினார். புதிய மாவட்ட செயலாளராக ஏ.கலை யரசி, மாவட்ட தலைவராக ஏ. முருகேசன், மாவட்ட பொரு ளாளராக வி.காமராஜ் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்ட னர். மேலும் 15 பேர் மாவட்ட குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் நூறு நாட்கள் வேலை வழங்கு வதை உறுதி செய்ய வேண்டும். ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை செய்யும் தொழிலா ளர்களுக்கு நாளொன்றுக்கு 281 ரூபாய் கூலி வழங்க வேண்டும். திட்ட தொழிலா ளர்களை காலையில் 7 மணிக்கு வர வேண்டும் என நிர்பந்தப்படுத்துவதை கண்டிப்பதுடன், ஒன்பது மணிக்கு தொழிலாளர்கள் வருகை தர அனுமதிக்க வேண்டும். இட மற்ற வர்களுக்கு வீட்டுமனைப் பட்டா உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. மேற்கண்ட கோரிக் கைகள் நிறைவேறாத பட்சத்தில் தொழிலாளர் களை திரட்டி பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் போராட்டம் நடத்து வது என்றும் முடிவு செய்யப் பட்டது.