பழனி, பிப்.27- பழனி பழனியாண்டவர் பாலிடெக்னிக்கில் மூன்றா மாண்டு பயிலும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு நேர்காணல் திங்கள்கிழமை நடைபெற்றது கல்லூரி தாளாளர், கல்லூரியின் இணை ஆணையர் அனுமதியின் பேரில் நடத்தப்பட்ட இந்த முகாம் சென்னை- மொபைல்-ஜிஒடி மூலம் நடத்தப்பட்டது . முகாமை மனித வள மேம்பாட்டுத்துறை மேலாளர் பி.பழனிச்சாமி, வேலை வாய்ப்பு அலுவலர் ரூபினா ஆகியோர் ஒருங்கிணைத்த னர். பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஆர்.கந்தசாமி துவக்கவுரையாற்றினார். டிப்ளமோ இன் கமர்ஷியல் பிராக்டிஸ், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை, மின்னணுவியல் மற்றும் தொடர்பியல், தகவல் தொழில்நுட்பம் போன்ற துறை களில் பயிலும் 75 மாணவர்கள் கலந்து கொண்டனர். தேர்வு செய்யப்பட்ட 43 மாணவர்களுக்கு ரூ.11,000 சம்பளம், ஊக்கத் தொகையாக ரூ.3,000 வழங்கப்படும். எனத் தெரி விக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பயிலக வேலை வாய்ப்பு அலுவலர் எம்.சக்திவேல் செய்திருந்தார்.