உதகை ஏப்.5- நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனையொட்டி ஆன்லைனில் தங்கும் விடுதி அறை முன்பதிவு செய்யும் சுற்றுலா பயணிகளிடம் பணம் மோசடிசெய்யும் சம்பவம் அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல்,மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது.இந்த சீசனில் சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வருகின்றனர். சுற்றுலா பயணிகளை மகிழ்விப் பதற்காக கோடை விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு மலர் கண்காட்சி வருகிற 19 ஆம் தேதி முதல் 23 ஆம்தேதி வரை நடக்கிறது.மேலும் மே மாதம் முழுவதும் கோடை விழா நடத்தப்படுகிறது. இதையொட்டி, தமிழக மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆன்லைன் மூலம் ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் அறை முன்ப திவு செய்கின்றனர். இந்தநிலையில், இவ்வாறு ஆன்லைனில் பணம் செலுத்தி அறை முன்பதிவு செய்யும் சுற்றுலா பயணிகளிடம் பணம் மோசடி செய்வதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதுகுறித்து ஊட்டி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பிலிப் கூறுகையில், கோடை சீசனில் ஏராளமானோர் ஊட்டியில் தங்கும் விடுதிகள் மற்றும் காட்டேஜ்களில் அறை முன் பதிவு செய்வார் கள் என்பதை தெரிந்து கொண்ட மோசடி பேர்வழிகள், இங்கு ஏற்கனவே உள்ள ஓட்டல்கள் அல்லது ஓட்டல்களே இல்லாமல் ஏதாவது ஒரு பெயரில் ஓட்டல்கள் இருப்பது போலஆன்லைனில் விவரங் களை பதிவேற்றம் செய்வார்கள். மேலும், சர்ச் எஞ்சின் ஆப்டிமிசேஷன் என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கூகுளில் யாராவது ஊட்டியில் அறை உள்ளதா என்று தேடி னால் இவர்கள் போலியாக உருவாக்கிய முகவரி,வங்கி கணக்கு எண் விவரங்கள் முதலில் வரும்படி செய்து விடுகின்றனர். இதைத் தொடர்ந்து அறைமுன்பதிவு செய்துவங்கி கணக்கு எண் மூலம் சுற்றுலா பயணிகள் பணம் செலுத்துகின்றனர். இதன் பின்னர் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் குறிப்பிட்ட ஓட்டலுக்கு செல்லும்போது மோசடி சம்பவம் நடந்திருப்பது தெரிய வரு கிறது. இதேபோல் பலரும் பாதிக்கப்பட்டு இருக்கலாம் அவர்கள் புகார் கொடுத்தால் தான் முழு உண்மை நிலவரம் தெரியவரும். இதுவரை சுமார் 10 ஓட்டல் நிர்வாகம் சார்பில் புகார் கொடுக் கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு வாடிக்கையாளரிடமும் ரூ 5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை பணம் ஏமாற்றப்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து வலைதல நிறுவனத்திற்கு புகார் அளித்து அந்த போலி இணையதள முகவரியை நீக்கம் செய்ய அறிவுறுத்தி கடிதம் கொடுத்துள்ளோம். அதேபோல் இணையதளம் மூலம் பணம் செலுத்தி அறை முன்பதிவு செய்யும் சுற்றுலாப் பயணிகள் அந்த ஓட்டலை தரைவழி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தலாம் இல்லா விட்டால் நம்பிக்கை கூறிய செயலிகள் மூலம் அறை முன்பதிவு செய்யலாம் என்றார்.