நாமக்கல், டிச. 5- பள்ளிபாளையம் நகராட்சி ஊழியர்கள் பணியாற்றி கொண்டிருந்தபோது, திடீரென சாலையின் நடுவே மின்கம் பம் சாய்ந்தது. இதில், இருசக்கர வாகனங்கள் சேதமாகி யது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த ஒட்ட மெத்தை ரவுண்டானா பகுதியில், பள்ளிபாளையம், நகராட்சி யின் சார்பில், குடிநீர் குழாயில் ஏற்பட்ட பிரச்சனை சம்பந்த மாக ஊழியர்கள் பணியாற்றிக்கொண்டிருந்தனர்.
ஜேசிபி இயந்திரம் மூலம் குடிநீர் குழாய்க்காக ஊழி யர்கள் பள்ளம் பறித்தபோது, அருகிலுள்ள மின்கம்பத்தை யும் சேர்த்து ஜேசிபி இயந்திரம் இழுத்த போது திடீரென மின் கம்பம் யாரும் எதிர்பார்க்காத வகையில் சாலையின் நடுவே விழுந்தது. அப்போது அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களின் மேலே மின்சார கம்பம் விழுந்ததில், மூன்று இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தது. நல்வாய்ப் பாக அப்பகுதியில் பொதுமக்கள், மற்றும் வாகனங்கள் ஏதும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
மேலும் மின்கம் பம் சாலையில் விழுந்ததால் ஈரோடு சேலம், கள்ளக் குறிச்சி, ஆத்தூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பிரதான சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட் டது. அப்பகுதியாக வந்த வாகனங்களை வேறு சாலை வழி யாக திருப்பி விடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த மின்சார ஊழி யர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் மின் கம்பத்தை அப்புறப் படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். மின்கம்பம் சாலை யில் விழுந்ததால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மின்வாரிய ஊழியர்கள் பழுதை சரி செய்யும் பணியில் ஈடு பட்டனர். நகராட்சி நிர்வாகம் மின்கம்பம் அருகே உள்ள குழாய் களை சரி செய்ய சாலையில் ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு தோண்டப்படும் போது, மின்சாரத்துறைக்கு தக வல் கொடுக்காமல் தன்னிச்சையாக செயல்படுவதால் இது போல் விபத்து ஏற்படுவதாக மின் துறை அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.