நாமக்கல், டிச.8- உலக மாற்றுத்திறனாளி கள் தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகள் சங்கத் தின் கொடியேற்றும் விழா ஞாயிறன்று நடைபெற்றது.
உலக மாற்றுத்திறனாளி கள் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில், நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஆவ ரங்காடு பகுதியில் ஞாயிறன்று கொடி யேற்று விழா நடைபெற்றது. சங்கத்தின் தாலுகா உதவிச்செயலாளர் எம்.சரவ ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி யில், சங்கத்தின் கொடியை கணேசன் ஏற்றி வைத்தார். சிபிஎம் பள்ளிபாளையம் தெற்கு ஒன்றியச் செயலாளர் எம்.லட்சுமணன், ஒன் றியக் குழு உறுப்பினர் பெருமாள் ஆகியோர் வாழ்த்தி பேசினர். சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் எம்.ஆர்.முருகேசன் நிறை வுரையாற்றினார். இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சந்திரமதி, மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.ரவி, சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செய லாளர் ஏ.அசன் உட்பட பலர் கலந்து கொண்ட னர். முடிவில், தாலுகாச் செயலாளர் கே.அருண் ண்குமார் நன்றி கூறினார். இதேபோன்று, ஓடப்பள்ளி அக்ரஹாரம் பகுதியில் மாற்றுத்தி றனாளிகள் சங்க தாலுகா உதவிச் செயலா ளர் சண்முகசுந்தரம் தலைமையில் நடை பெற்ற நிகழ்ச்சியில், சங்கத்தின் கொடியை ராமநாதன் ஏற்றி வைத்தார். இதில் கிளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டம், 15.வேலம்பாளை யம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் லோகநாதன் தலைமை வகித் தார். மாவட்டக்குழு உறுப்பினர் கமலக்கண் ணன் கொடியை ஏற்றி வைத்தார். இதில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.ஜெயபால், செயலாளர் பா.ராஜேஷ், முன்னாள் பொரு ளாளர் ஆறுமுகம், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் பாண்டியன், வர்கீஸ், தணிகாசலம் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், முத்துலட்சுமி ராஜா நன்றி கூறினார்.