districts

காளிகேசத்தில் ஆற்றில் மூழ்கி பொறியாளர் பலி மனைவியை காப்பாற்ற முயன்றவர் சுழலில் சிக்கினார்

நாகர்கோவில், அக்.30- காளிகேசத்தில் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய மனைவியை மீட்க முயன்ற பொறி யாளர் சுழலில் சிக்கி பலியானார். சென்னையில் உள்ள ஐ.டி. நிறு வனத்தில் நாகர்கோவில் பார்வதி புரத்தைச் சேர்ந்தவர் சுஷ்மா (26)வும், தில்லி துவாரகா நகர் பகுதியைச் சேர்ந்த ஷியாமும் (28)  பொறியாளர்களாக பணியாற்றினர். இரு வருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திரு மணம் நடந்தது. தலை தீபாவளி என்பதால்  அதனை கொண்டாடுவதற்காக இருவரும் பார்வதிபுரத்திற்கு வந்திருந்தனர். தலை  தீபாவளியை கொண்டாடிய இவர்கள் சனி யன்று (அக்.29) காலை காளிகேசம் பகுதி யைச் சுற்றி பார்ப்பதற்காக சென்றனர். அந்த  பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக மழை  பெய்ததால் ஆற்றில் வெள்ளம் அதிகளவு  வந்து கொண்டிருந்தது. ஆற்றின் கரையில்  இருந்து இருவரும் பேசிக் கொண்டிருந்த னர். எதிர்பாராத விதமாக சுஷ்மா ஆற்றில்  தவறி விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியா ததால் நீரில் மூழ்கத் தொடங்கினார். மனை வியை காப்பாற்று வதற்காக ஷியாம் ஆற்  றில் குதித்தார். அப்போது அவர் அந்த பகு தியில் உள்ள சுழலில் சிக்கிக்கொண்டார். இவருக்கும் நீச்சல் தெரியாது. இதனால் சுழலில் இருந்து ஷியாமால் வெளியே வர  முடியவில்லை. ஆனால் சுஷ்மா அந்த  பகுதியில் உள்ள செடி ஒன்றை பிடித்துக் கொண்டு கரைக்கு பத்திரமாக வந்தார். மனைவி கண்ணெதிரே ஷியாம் தண்ணீரில் மூழ்கி மாயமானார். இதனால் சுஷ்மா கூச்ச லிட்டார். அங்கிருந்த சுற்றுலா பயணிகள்  அங்கு திரண்டனர். இதுகுறித்து நாகர்கோவில் தீய ணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரி விக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேடியதில் ஷியாம் பிண மாக மீட்கப்பட்டார். இது குறித்து கீரிப் பாறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கிறார்கள். ஷியாமின் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. தலை தீபா வளி கொண்டாட வந்த இடத்தில் பொறியா ளர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.