நாகர்கோவில் ஜூன். 22 கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன் பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத்தி னர் கோரிக்கைகளை முன்வைத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2017 ஜனவரி 1 முதல் ஓய்வூதிய மாற்றம் வழங்க வேண்டும், முடக்கப் பட்ட ஐ டி ஏ ஐ - உடனே வழங்க வேண்டும், நிலுவையிலுள்ள மருத்துவப்படி /மருத்துவ பில்களை உடனே வழங்க வேண்டும், சி ஜி எச் எஸ் ஐ முறைப் படுத்த வேண்டும் , நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைகளை அமல் படுத்த வேண்டும், வி ஆர் எஸ் - 2019 ஓய்வூதியர்களுக்கு மறுக்கப்பட்ட ஓய்வூதிய பலன்களை உடனே வழங்க வேண்டும். எல்.பி.டி ஊதியத்தில் பாதிக்கப்பட்ட ஓய்வூதிய பலன்களை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனர். சங்கத்தின் மாவட்ட தலைவர் ஏ.மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார் மாவட்ட செயலாளர் கே. ஜார்ஜ், பிஎஸ்என்எல்- சி.சி.டபிள்யு அகில இந்திய உதவி செயலாளர் சி.பழனி சாமி, டி.என்.டி.சி.டபிள்யு.யு.ஏ. செல்வம் உள்ளிட்டோர் பேசினர். மற்றும் எராளமான பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் மற்றும் பல சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்