கோவை, ஜூன் 29– பிஎஸ்என்எல் நிறுவனத்தை தனியார்மயமாக்கும் நடவடிக் கையை மத்திய அரசு உடனடி யாக கைவிட வேண்டும் என பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத் தின் மாநில மாநாடு வலியுறுத் தியுள்ளது. அகில இந்திய பிஎஸ்என்எல்-டிஓடி ஓய்வூதியர் சங்கத்தின் தமிழ் மாநில 5 ஆவது மாநாடு கோவையில் சனியன்று துவங்கி யது. பேரூர் துர்கா மஹாலில் நடைபெற்ற இம்மாநாட்டிற்கு சங் கத்தின் மாநில தலைவர் மாணிக் கமூர்த்தி தலைமை தாங்கினார். முன்னதாக மாநாட்டில் தேசிய கொடியை சங்கத்தின் அகில இந் திய துணை பொருளாளர் கே.பங்க ஜவல்லியும், சங்க கொடியை அகில இந்திய பொதுச்செயலாளர் கே.ஜி.ஜெயராஜ் ஆகியோரும் ஏற்றிவைத்தனர். மாநில உதவி செயலாளர் என்.குப்புசாமி அஞ் சலி தீர்மானத்தை முன்மொழிந் தார். வரவேற்புக்குழுவின் செய லாளர் வி.வெங்கட்ராமன் வர வேற்புரையாற்றினார். இம் மாநாட்டை அகில இந்திய பொதுச்செயலாளர் கே.ஜி.ஜெய ராஜ் துவக்கி வைத்து உரையாற் றினார். மாநில செயலாளர் சி.கே.நரசிம்மன் அறிக்கையை முன்வைத்து பேசினார். முன்னதாக, இம்மாநாட்டை வரவேற்புக்குழு தலைவரும், கோவை நாடாளுமன்ற உறுப் பினருமான பி.ஆர்.நடராஜன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத் தின் மாநில செயலாளர் ஏ.பாபு ராதாகிருஷ்ணன், அகில இந்திய அஞ்சல் ஆர்எம்எஸ் ஓய்வூதியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.ராகவேந்திரன் மற்றும் மோகன்தாஸ், ஜி.எஸ்.நரசிம்மன், சிஐடியு மாநில துணை தலைவர் எஸ்.ஆறுமுகம், பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர் சங்கத் தின் மாநில செயலாளர் சி.வினோத்குமார், உழைக்கும் பெண்கள் அமைப்பின் மாநில அமைப்பாளர் பெர்லின் ஆலிஸ் மேரி ஆகியோர் வாழ்த்திப் பேசி னர்.
இம்மாநாட்டில், இந்திய பொதுத்துறை நிறுவனங்களின் வளர்ச்சிக்கு எவ்வித உதவியும் செய்யாத மத்திய அரசு, தனியார் கார்ப்ரேட்டுகளுக்கு பல்வேறு சலுகைகளை செய்து வருகிறது. இருப்பினும், தனியார் தொலை பேசி நிறுவனங்கள் இக்காலத்தில் கடும் சரிவை சந்தித்துள்ளது. அதேநேரம், பொதுத்துறை நிறு வனமான பிஎஸ்என்எல் நிறுவ னம் வளர்ச்சியை நோக்கி செல் கிறது. மத்திய அரசின் எவ்வித உதவியும் இல்லாமல், ஊழி யர்களின் உணர்வுமிக்க உழைப்பி னால் இது சாத்தியமாயிற்று. இந்நிலையில் பிஎஸ்என்எஸ் நிறுவனத்தை மத்திய அரசு தனியார்மயமாக்கும் நடவடிக்கை களில் ஈடுபடுகிறது. மேலும், பொதுத்துறை நிறுவனங்களின் வசம் உள்ள நிலங்களை ஒருங் கினைத்து நில வங்கியை உரு வாக்கி தனியார் கார்ப்பரேட்டு களுக்கு தாரைவார்க்கும் சூழ்ச் சியை மேற்கொள்கிறது. இவ் வாறு மத்திய அரசு மக்களின் சொத்துக்களை தனியாருக்கு தாரைவார்க்கும் செயலை ஒருபோ தும் அனுமதிக்க முடியாது. ஆகவே, பிஎஸ்என்எல் ஊழி யர்கள், ஓய்வூதியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரி கள் சங்கங்கள் ஒன்றினைந்து பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாக்கும் ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுப் போம் என மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் மாநில பொருளாளர் எஸ்.நட ராஜா நன்றி கூறினார். இம் மாநாடு ஞாயிறன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.