கரூர், ஜன.12- அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் ஓய்வூதியர்களுக்கு 1.1.2017 முதல் பென்சன் மற்றும் மூன்றாவது ஊதியக் குழுவின் அடிப்படையில் 15 சதவீதம் பென்ஷன் உயர்வு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து, பிரதமரிடம் கோரிக்கை மனுவை அளிக்க வலியுறுத்தி கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜோதிமணியிடம், ஓய்வூதியர் சங்க கரூர் மாவட்டச் செயலாளர் ஐ.ஜான்பாஷா மனுவை அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜோதிமணி, பிரதமருக்கு, டெலிக்காம் அத்தாரட்டி ஆப் இந்தியாவுக்கு, 15 சதவீதம் பென்சன் உயர்வு வழங்க ஆவணம் செய்ய வேண்டும் என தொலைத்தொடர்பு அமைச்சருக்கு கடிதம் எழுதுவதாக கூறினார்.