நாகப்பட்டினம், ஏப்4- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நாகப்பட்டினம் மாவட்டக் குழு சார்பில் இளம் பெண்கள் மாவட்ட மாநாடு நடைபெற் றது.மாவட்டத் தலைவர் பி.எம்.நன்மாறன் தலைமை வகித்தார். இந்த மாநாட்டில் குழந்தைகள்-பெண்கள் மீதான தாக்குதலை தடுக்க வேண்டும். பாலின சமத்துவத்தை உறுதிப்பபடுத்த வேண்டும் என வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மநாட்டில் கலந்து கொண்டு பேசிய வாலி பர் சங்க மாநிலச் செயலாளர் ஏ.வி. சிங்கார வேலன், “ இந்தியா பெண்கள் வாழ்வதற்கு தகுதியற்ற நாடுகளில் முதல் இடத்தை பிடித் திருக்கிறது. நான்காவது நிலையிலிருந்து கடந்த எட்டு ஆண்டுகளில் முதலிடத்தை பிடித்துள்ளது. போதைப்பழக்கம், குற்றச் செயல், வன்முறை போன்றவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதற்கெதிராக வாலிபர் சங்கம் மாநில முழு வதும் ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறது என்றார். மாநாட்டில் வாலிபர் சங்க மாவட்டச் செய லாளர் டி.அருள்தாஸ், மாவட்டத் துணைத் தலைவர் எஸ்.மாலா, மாவட்டக்குழு உறுப்பி னர்கள் சி.மகிழா வீ.சுபாஸ்ரீ மாவட்டப் பொரு ளாளர் என்.எம்.பாலு உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.