நாகப்பட்டினம், ஜூன் 15- நாகப்பட்டினம் மாவட்டம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் நாகை மாவட்ட குழு சார்பில் எழுத்தாளர் கு.சின்னப்ப பாரதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. தமிழகத்தின் மிகச் சிறந்த எழுத்தாளரும், ஏராளமான நாவல்களை தமிழ் உலகத்திற்கு தந்தவருமான எழுத்தாளர் கு.சின்னப்ப பாரதியின் மறைவையொட்டி நாகை மாவட்ட தமுஎகச சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாவட்டத் தலைவர் கவிஞர். ஆவராணி ஆனந்தன் தலைமை வகித்தார். செம்மலர் மாத இதழின் பிதாமகரும், தமுஎகச-வின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவரும், தன் வாழ்நாள் முழுவதையும் எளிய மக்களுக்கான இலக்கியங்களைத் தந்தவருமான கு.சி.ப வுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஆதி.உதயக்குமார் மாவட்டக்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் ஆர்.நடராஜன், கே.ட்டி.முருகையன், ஏ.வி.எம்.பகத்சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.