districts

img

தலைஞாயிறு பேரூராட்சியில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அமைச்சர் பிரச்சாரம்

வேதாரண்யம், பிப்.12 - நாகப்பட்டினம் மாவட்டம் வேதா ரண்யத்தை அடுத்த தலைஞாயிறு பேரூ ராட்சி பகுதியில் நகர்ப்புற ஊரக உள்ளாட்சி  தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலை யில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். சிபிஎம் வேட்பாளர் ஏ.சுபாஷி னிக்கு அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குச் சேகரித்தார். பிரச்சாரத்தின் போது சிபிஎம் எம்.முருகை யன், ஏ.வேணு, ஒன்றிய செயலாளர் ராஜா,  மாவட்ட பொறுப்பாளர் கௌதமன், முன்னாள்  எம்எல்ஏ மதிவாணன் மற்றும் கூட்டணி கட்சி யினர் கலந்து கொண்டனர்.