வேதாரண்யம், ஜன.7 - நாகை மாவட்டம் வேதா ரண்யத்தை அடுத்த பிராந்தி யங்கரை, அண்டகத்துறை, மூலக்கரை, கரியாப்பட்டி னம், வடமழைமணக்காடு, உம்பளச்சேரி, மகாராஜபுரம் பகுதிகளில் சில நாட்களுக்கு முன் கனமழை பெய்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் சாய்ந்தன. மேலும் வயலில் தண்ணீர் தேங்கி நெற்கதிர் கள் முளைத்து அழுகிவிட்டன. தற்போது நடவு செய்யப் பட்ட நாற்றுகள் முற்றிலும் தண்ணீருக்குள் மூழ்கி விட்டன. இதனால் மகசூல் பாதித்து, ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகிவிட்டதாக விவ சாயிகள் கண்ணீர் வடிக்கின்ற னர். உடனடியாக வேளாண்மைத் துறை அதி காரிகள் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என வேண்டுகோள் விடுத் துள்ளனர்.