நாகப்பட்டினம், ஆக.19 - நாகப்பட்டினம் மாவட்டம் பனங்குடி ஊராட்சியில் வெட்டாற்று நதிக்கரையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் ஏழாவது பட்டமளிப்பு விழா மீன்வள பல்கலைக் கழக கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி கலந்துகொண்டு பட்டங்களை வழங்கி பேருரையாற்றினார். 366 மாணவர் களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. மீன்வள இளங்கலை அறிவியல், மீன்வள முதுநிலை அறிவியல், மீன் உணவு மற்றும் ஊட்டச்சத்து தொழில்நுட்ப அறிவியல், மீன்வள மேலாண் மையியல், மீன்வள உயிர் தொழில்நுட்பவி யல் உள்ளிட்ட பல்வேறு பாடப் பிரிவுகளில் தேர்வு பெற்ற மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் மீன்வளப் பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினரும், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினருமான வி.பி.நாகை மாலி, மீன்வளம், மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், ஒன்றிய வேளாண் பல்கலைக்கழகம் மணிப்பூர் வேந்தர் ஐயப்பன், நாகை மாவட்ட ஆட்சி யர் மரு.அருண் தம்புராஜ், மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் என்.கவுதமன், ஆதிதிராவிடர் நலத்துறை தலைவர் உ.மதிவாணன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.