districts

நாகை நகரை சூழ்ந்த குப்பை புகைமூட்டம் மக்களை காக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

நாகப்பட்டினம், ஜூலை 17 - நாகப்பட்டினம் மாவட்டம் நாகப் பட்டினம் நகராட்சி குப்பை கிடங்கில்  இருந்து வெளியேறும் புகையால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், குழந்தைகள் பல்வேறு வகையில் இன்னலுக்கு ஆளாகின்றனர். நாகப்பட்டினம் நகராட்சி குப்பை கிடங்கு மேலக்கோட்டைவாசலில் உள்ள பைக்காரா பின்புறத்தில் ஆண் டாண்டு காலமாக குப்பைகள் கொட் டப்பட்டு வருகின்றன. நகராட்சி முழு வதும் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகள், மேலக்கோட்டைவாசல் அருகிலுள்ள வேதாரண்யம் கால் வாய் பக்கவாட்டில் கொட்டப்பட்டு வருகிறது. குப்பை மேட்டில் இருந்து  வெளியேறும் புகையால் நாகப்பட்டி னம், திருவாரூர், தஞ்சாவூர் முதன்மை சாலையில் செல்கிற வாகன ஓட்டிகள் துர்நாற்றத்துடன் கூடிய புகை மூட்டத்தால் வாகனம் இயக்குவதில் மிகப்பெரும் சிக்கலை சந்திக்கின்றனர். அவ்வழியே செல்லும் பாதசாரி களுக்கும், வாகனத்தில் பயணிப்பவர் களுக்கும் மூச்சுத் திணறல் ஏற்படு கிறது. அங்கு வசிக்கும் பொது மக்கள், கடை நடத்தும் வியாபாரி கள் என அனைவருக்கும் குப்பை கிடங்கில் இருந்து வெளியேறும் புகை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத் துகிறது.  குப்பை கிடங்கு அருகிலேயே நாகப்பட்டினம் நகராட்சியின் சிறுவர் பூங்கா ஒன்று உள்ளது. தினசரி அப்பகுதியிலுள்ள வயது முதிர்ந் தோர், குழந்தைகள், ஓய்வெடுக்க  செல்பவர்கள் பலர் அந்தப் பூங்கா வில் மாலை நேரங்களில் ஓய்வு  எடுப்பதும் குழந்தைகள் விளையாடு வதுமாக இருக்கின்றனர். ஆனால் அப்பகுதியிலிருந்து வரும் குப்பை கிடங்கின் புகை மூட்டத்தால் அங்கு விளையாடும் குழந்தைகள், ஓய்வெ டுக்க வந்திருப்பவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.

 இப்படி மனித உயிரோடு விளை யாடும் நாகப்பட்டினம் நகராட்சி யின் நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்தவித நடவ டிக்கையும் இல்லை என மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை நகரச் செயலாளர் க.வெங்கடேசன் தெரி வித்துள்ளார். குப்பை கிடங்கை ஒட்டிய குடி யிருப்பு பகுதிகளிலும், குப்பையில் இருந்து வெளியேறும் புகையால் இரண்டு கி.மீட்டர் தூரத்திற்கு மக்கள்  வசிக்கும் பகுதிகளில், பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. தினசரி இப்படி புகை மூட்டத்தால் பாதிக்கப்ப டும் மக்கள் சுவாசக் கோளாறு காரண மாக மருத்துவமனையை நாடிச் செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டுள் ளது. மிக அடர்த்தியாக மக்கள் வசிக்கும் பகுதிகளில், குப்பை மேட்டில் இருந்து வெளியேறும் புகை  சுகாதார சீர்கேட்டை மேலும் மேலும்  உற்பத்தி செய்கிறது.  துர்நாற்றமும் புகைமூட்டம் இணைந்து கண் எரிச்சலுடன் நாகப் பட்டினம் நகரத்திற்குள் நுழைய வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே நாகப்பட்டினம் நகராட்சி நிர்வாகம் மக்களின் உயிரோடு விளையாடும் இத்தகைய போக்கை  விடுத்து தினசரி பற்றி ஏரியும் குப்பை  கிடங்கை சரியாக பராமரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.