மதுரை, ஜன.25- தனியார்மயத்தை தீவிரப்படுத்தும் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து மதுரை மாநகராட்சி தொழிலாளர்கள் திங்களன்று காத்திருப்புப் போராட்டம் நடத்தினர். மதுரை மாநகராட்சியில் அனைத் துப் பிரிவுகளிலும் ஆட் குறைப்பு- ஊதி யக் குறைப்புக்கு வழிவகுக்கும் தனி யார்மய நடவடிக்கையை தீவிரப் படுத்தும் நகராட்சி ஆணையரகத்தின் சுற்றறிக்கை உத்தரவை திரும்பப் பெறவேண்டும். முன்களப் பணியா ளர்கள் என்ற முறையில் தூய்மை பணி யாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்க கடந்த மே 28-ஆம் தேதி பிறப்பித்த அரசாணையை உட னடியாக நிறைவேற்ற வேண்டும். சுகா தாரம்-பொறியியல் பிரிவில் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண் டிய ஏழாவது ஊதியக்குழு பணப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். மதுரை மாநகராட்சியில் சுகா தாரம் மற்றும் பொறியியல் பிரிவில் பத்தாண்டுகளாக அயற்பணி முறை நடைமுறையில் உள்ளது. சுகாதாரப் பிரிவுகளில் முறையான வருகைப் பதி வேடு பராமரிக்கப்பட்டு வரும் நிலை யில், பொறியியல் பிரிவுகளில் உதவிப் பொறியாளர்கள் மற்றும் மின் கண்கா ணிப்பாளர்களால் பணியாளர்கள் பிரி வில் வருகைப் பதிவேடு இதுநாள் வரை பராமரிக்கப்படாத நிலையில் ஏராளமான முறைகேட்டிற்கு வழி வகுத்துள்ளது.
பணியாளர்கள் எண்ணிக்கை குறித்து போலியான கணக்கு காண்பித்து சம்பளத்தை பெற்று பணியாளர்களுக்கு மிகவும் சொற்பமான ஊதியத்தையே வழங்கி வருகின்றனர். வருகைப் பதிவேடு முறைகேடு, நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி ஊழலில் ஈடுபட்டுள்ள அனைத்து உதவிப் பொறியாளர்கள், மின் கண்காணிப்பாளர்கள் மீதும் துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி மதுரை மாநக ராட்சியில் திங்களன்று என்று காத்தி ருப்பு போராட்டம் நடைபெற்றது. மாநகராட்சி தொழிலாளர் சங்க (சிஐடியு) மாவட்டப் பொதுச் செயலா ளர் எம்.பாலசுப்பிரமணியன் தலைமை யில் நடைபெற்றது. தமிழ்நாடு சுகா தாரப் பணியாளர்கள் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் எம்.அம்சராஜ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட துப்புரவு மேம்பாட்டு தொழிற்சங்க அமைப்பாளர் எஸ். பூமிநாதன்,பொறியியல் பிரிவு பணி யாளர்கள் சங்கத் தலைவர் சி.எம்.மகு டீஸ்வரன், தூய்மைப்பணி மேற்பார் வையாளர்கள் சங்கத் தலைவர் எஸ். முருகன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். காத்திருப்புப் போராட்டத்தில் பங் கேற்றவர்கள் மாநகராட்சியின் வளர்ச்சிக்கு ரூ.100 கோடி ஒதுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினர்.