districts

img

போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு மருத்துவக் காப்பீடு திட்டத்தை அமல்படுத்துக! ஓய்வூதியர் அமைப்புகள் வலியுறுத்தல்

நாகப்பட்டினம், மே 28 - சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை குறித்த விவாதத்தில் போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு எந்த விதமான நிதியும் ஒதுக்கீடு செய்யவில்லை. 12.5.2022-ல் போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் மாநில அரசினால் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை எவ்வித பலனும் அளிக்காமல்  போக்குவரத்து ஓய்வூதியர் களின் ஓய்வூதியம் பற்றி முடிவு எதுவும் தெரிவிக்கா தது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அமல்படுத்து வதாக ஏற்றுக் கொண்ட மருத்துவ காப்பீட்டு திட்டம் கூட போக்குவரத்து ஓய்வூதி யர்களுக்கு மறுக்கப்பட்டு வருகிறது. ஓய்வு பெற்றவர்களுக் கும் விருப்ப ஓய்வு பெற்றவர் களுக்கும் வழங்கப்பட வேண்டிய பணப்பலன்கள் வழங்கப்படாமல் பல  ஆண்டுகளாக இழுத்தடிக்கப் படுகிறது. எனவே போக்கு வரத்து ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றிட கோரி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய-மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூ தியர் அமைப்புகளின் ஒருங் கிணைப்புக் குழு சார்பாக நாகப்பட்டினம் புதிய பேருந்து  நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலை வர் ஏ.நடராஜன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி எஸ்.கணபதி பேசி னார். சிஐடியு மாவட்ட செய லாளர் கே.தங்கமணி, தொழிற் சங்க கூட்டமைப்பு தலைவர் சு.சிவகுமார், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அ.தி.அன்பழகன், கும்பகோ ணம் கோட்ட பொதுச் செய லாளர் எஸ்.ஆர்.ராஜேந்தி ரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.