நாகப்பட்டினம், நவ.19 - நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங் கண்ணியை அடுத்த பிரதாபராமபுரம், தெற்கு தெரு புதுபாலம் பகுதியைச் சேர்ந்தவர் கோ.சபரி கிருஷ்ணன் (27). இவர் வேளாங்கண்ணி மின்வாரிய பிரிவு அலுவலகத்தில் கேங்மேனாக பணியாற்றினார். கடந்த 7.7.2021 அன்று பரவை அருகே மின் பாதைகளுக்கு இடையூறாக இருந்த மரக்கிளைகளை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது உயரழுத்த மின் கம்பியில் மரக்கிளை உரசி, சபரிகிருஷ்ணன் மீது மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தார். இருபது நாட்களில் திருமணம் நடை பெற இருந்த நிலையில், இவரது மரணம் அவரது குடும்பத்தை மட்டுமன்றி அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தி யது. இந்நிலையில் உயிரிழந்த சபரி கிருஷ்ணனின் குடும்பத்துக்கு நிவார ணத்தொகை மற்றும் வேலை வழங்க வேண்டும் என இந்திய தொழிற்சங்க மையத்தின் சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினரின் தொடர் முயற்சி யால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத் திற்கு இழப்பீட்டுத் தொகை வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு நேரடியாக சென்று தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலை வர் என்.கௌதமன், மாவட்ட ஆட்சியர் மரு.அருண்தம்புராஜ் ஆகியோர் ரூ.3 லட்சத்திற்கான காசோலையை வழங்கி னர். அதனைப் பெற்றுக் கொண்டு அர சுக்கு நன்றி தெரிவித்த குடும்பத்தினர், எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் வி.சுப்ரமணியன், சிபிஎம் கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் எம்.அப்துல் அஜீஸ், இந்திய தொழிற்சங்க மையத்தின் மாவட்ட செயலாளர் கே.தங்கமணி, தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர் சங்கம் சார்பில் என்.வெற்றிவேல், பிரதாபராம புரம் ஊராட்சி மன்ற தலைவர் சிவராஜ், வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத் தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.