districts

img

மோடி அரசின் மாற்றான்தாய் போக்கைக் கண்டித்து மதுரை மாவட்டத்தில் 400 கி.மீ. நடைபயணம் நிறைவு

மதுரை, டிச.27- எய்ம்ஸ் மருத்துவமனை கட்டு மானப் பணியை உடனடியாகத் தொடங்கவேண்டும். மருந்து மற்றும்  ஆராய்ச்சி நிறுவன (நெய்பர்)  நிறு வன கட்டுமானப் பணியை தொடங்க வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தை பாதுகாக்கவேண்டும் என ஒன்றிய மோடி அரசை வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்ட 400 கி.மீ நடை பயணம் திங்களன்று மாலை நிறைவு பெற்றது. செவ்வாயன்று காலை மதுரை பாத்திமா கல்லூரியிலிருந்து நான்கு பயணக்குழுவினரும் மதுரை நகர வீதிகளில் மோடி அரசின் செயலற்ற தன்மையை அம்பலப்படுத்தி நடை பயணமாக ஆட்சியர் அலுவல கத்தை அடைகின்றனர்.  ஆட்சியர் அலுவலகம் அருகே  கோரிக்கை களை வலியுறுத்தி செங்கொடிகளு டன் முழக்கமிடுகின்றனர் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர். இந்த கோரிக்கை முழக்கத்தில் மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லச் செயற்குழு உறுப்பினர்கள் சு. வெங்கடேசன் (மக்களவை உறுப்பி னர், மதுரை.), கே.சாமுவேல்ராஜ், புறநகர் மாவட்டச் செயலாளர் கே. இராஜேந்திரன், மாநிலக்குழு உறுப் பினர்கள் எஸ்.கே.பொன்னுத்தாய், எஸ்.பாலா உட்பட ஏராளமானோர் பங்கேற்கின்றனர். நான்கு நாட்கள் நடைபெற்ற நடைபயணத்தில், 100 நாள் வேலைத்திட்டத்தில் முறையான கூலியும் கிடைக்கவில்லை. மோடி அரசு எங்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணத்தையும் குறைத்து விட்டது என்ற  குரலை கிராமங்கள் தோறும் கேட்க முடிந்தது. சில இடங்களில் மக்கள் அதென் னப்பா நெய்பர் என்று கேட்டனர். அவர்களிடம் நெய்பர் குறித்து கட்சியினர் விளக்கியதோடு, இந்த நிறுவனம் வந்தால் பெரு-சிறு நிறுவனங்கள் மதுரைக்கு வரும். உங்கள் பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என விளக்க மளித்தனர்.

எய்ம்ஸ்-ன்னா என்னப்பா என்ற மக்களும் உண்டு. அவர்களிடம் மதுரை பெரிய ஆஸ்பத்திரி மாதிரி, அதுவும் ஒரு பெரிய ஆஸ்பத்திரி.  பெரிய பெரிய வைத்தியத்திற் காக சென்னைக்கு போகவேண்டிய தில்லை. திருமங்கலத்திலேய வைத்தியம் பார்க்கலாம் என விளக்கினர் நடைபயணத்தில் பங்கேற்றவர்கள். மொதல்ல 100 நாள் வேலைக்கு பிரதமர கூடுதல் காசு கொடுக்க  சொல்லுங்கப்பா என விவசாயி களும் விவசாயத் தொழிலாளர் களும் கூறினர்.  அரையாண்டுத் தேர்வு விடு முறை என்பதால் கட்சித் தோழர்கள் பலர் குடும்பங்களோடு கலந்து கொண்டனர். அவர்களது பிள்ளை கள் நீட் தேர்வால் ஏற்படும் ஆபத்து குறித்தும். கிராமப்புற மாணவ-மாணவிகள் மருத்துவம் படிக்கவே முடியாது என்றும் விளக்கினர். இந்த நடைபயணத்தின் பிர தான நோக்கம் மேற்கூறியவைகள் என்றாலும், நடைபயணம் மேற்  கொண்ட கிராமங்களில் மக்களும்,  வர்த்தகர்களும் சரி மதுரை சார்ந்த சில முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்தனர். குறிப்பாக விவசாயிகள் வரத்துக் கால்வாய்களை சீரமைக்க வேண்டும். உசிலம்பட்டி 58-ஆம்  கால்வாயில் கறாரா ஒவ்வொரு வரு ஷமும் தண்ணி தெறக்கனும் இதை யும் குறிச்சுக்கொங்கோ என்றனர். வயதான முதியவர்கள் எங்க ளுக்கு இலவசமாக அரசு கொடுக் கும் ரூவா கிடைக்கல ஏற்பாடு செய்  வீங்களா எனக் கேட்டனர்.  கிராமப்புற மாணவிகள் நாங்கள் அரசு கல்லூரியில் குறைந்த கட்ட ணத்தில் படிக்க மதுரைக்கு தான்  செல்ல வேண்டியுள்ளது. சோழவந் தான், கிழக்கு தாலுகாவில் ஒரு பெண்கள் அரசுக் கல்லூரி திறக்க வேண்டும் என்றனர்.

பொங்கலுக்கு ரூ.1000 இலவச மாக முதல்வர் தர்றேன்னு சொல்லி யிருக்காரு. சந்தோசமா இருக்கு. ஆனா, நாங்க வெளையவெச்சு வைத்திருக்கிற சீனிக் கரும்பை அரசு கொள்முதல் செய்து  மக்க ளுக்கு இலவசமாக கொடுக்க வேண்டும் என்றனர் மேலூர், கிழக்கு தாலுகா பகுதிகளைச் சேர்ந்த விவ சாயிகள். அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை நம்பி கரும்பு பயிரிட் டுள்ள விவசாயிகள், சர்க்கரை ஆலையை இந்த வருடம் இயக்க வேண்டும்.  மள்ளப்புரம்-மயிலாடும்பாறை இடையிலான மலைச்சாலையை அகலப்படுத்தி போக்குவரத்திற்கு திறந்துவிட வேண்டும். இதன் மூலம் திருவில்லிபுத்தூர், இராஜ பாளையம், திருநெல்வேலி, நாகர் கோவில் பகுதியிலிருந்து தேனி, கம்பம், குமுளி மாவட்டங்களுக்கு செல்பவர்களின் பயணநேரம் வெகு வாகக் குறையும் என்றனர். 400 கி.மீ நடைபயணத்தை கட்சி யின் மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநிலக்குழு உறுப்பி னர் இரா.விஜயராஜன், துணை மேயர் டி.நாகராஜன் ஆகியோர் வாழ்த்தினர். நடைபயணத்தை நிறைவு செய்து வைத்து சமயநல்லூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம் பேசினார்.