districts

img

ரயில்வே துறையில் வேலை வழங்க கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, செப்.19 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட பொன்மலை பகுதிகுழுவின் 8-வது மாநாடு ஞாயிறன்று சங்கத்திடலில் தோழர் முருகேசன் நினைவரங்கத்தில் நடந்தது. மாநாட்டிற்கு பகுதிகுழு உறுப்பினர் கணேசன் தலைமை வகித்தார். மாநாட்டை மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சம்பத் துவக்கி வைத்தார். மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் நிறைவுரையாற்றினார். பொன்மலை பகுதி முன்னாள் ராணுவ காலனியில் உள்ள நடுநிலைப்பள்ளியை, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். பொன்மலை ரயில்வே பனிமனையில் கடந்த 2004ம் ஆண்டு முதல் அப்ரண்டீஸ் முடித்து வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் அனைவருக்கும் ரயில்வே துறையில் உடனடியாக வேலை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் பொன்மலை பகுதிகுழு செயலாளராக டி.விஜயேந்திரன் தேர்வு செய்யப்பட்டார். மேலும் 9 பேர் கொண்ட பகுதிக்குழு தேர்வு செய்யப்பட்டது.