மயிலாடுதுறை, பிப்.21 - மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் கடலங்குடி ஊராட்சிக்குட் பட்ட திருவேள்விக்குடி கிராமத்தில் செயல்பட்டு வந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து அப்பகுதி விவ சாயிகள் 5 நாட்களாக தொடர் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். அதிகாரிகள் அவர்களை கண்டு கொள்ளாததால் அதிருப்திய டைந்த விவசாயிகள், திங்களன்று மயி லாடுதுறை சித்தர்காட்டில் நவீன அரிசி ஆலை முன்பு முற்றுகைப் போராட்டத் தில் ஈடுபட்டனர். கடலங்குடி ஊராட்சிக்குட்பட்ட திரு வேள்விக்குடி கிராமத்தில் கடந்த 15 ஆண்டுகளாக தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வந்தது. இந்நிலையில் திருவேள்விக்குடி கிராமத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் கிராம விளையாட்டு மைதானத்திற்கு இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டது. இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த விவ சாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்திய நிலையில் அரசு சார்பில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இருப்பினும் கடந்த வாரம் திடீ ரென்று புதிய இடத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படத் துவங்கியது. ஏற்கனவே பழைய இடத்தில் நூற்றுக்கணக்கான மூட்டை களுடன் காத்திருந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். அதிக தொலைவு உள்ளதால் தங்களுக்கு மூட்டைகளை எடுத்துச் செல்வதில் சிரமம் ஏற்படும் என்றும் கூடுதல் செலவு பிடிக்கும் என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தனிநபர்கள் தூண்டுதலின் பேரில் பழி வாங்கும் நடவடிக்கை என கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் கடந்த 15 ஆண்டு களாக நேரடி நெல் கொள்முதல் நிலை யம் இயங்கி வந்த இடத்தில், நெல் மூட்டைகளுடன் கொள்முதல் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து கடந்த பிப்.16 ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட னர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் முழு ஆதரவுடன் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்ட போராட்டம், 5 நாட்களாக தொடர்ந்த நிலையிலும், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால் மயிலாடுதுறை சித்தர் காட்டில் உள்ள நவீன அரிசி ஆலை முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் எஸ்.துரை ராஜ் தலைமையில் அப்பகுதி விவசாயி களும் இணைந்து முற்றுகைப் போராட் டத்தில் ஈடுபட்டனர். விவசாயத் தொழி லாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜி. ஸ்டாலின், இயற்கை விவசாயி மாப்படுகை அ.ராமலிங்கம், கரும்பு விவசாயிகள் சங்கத்தின் முருகன், ஜாக் அமைப்பின் பொதுச் செயலாளர் டி.ராயர், சிபிஎம் ஒன்றிய செயலாளர் டி.ஜி.ரவி, சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் சி.மேக நாதன், சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர். ரவீந்திரன், விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் வைரவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விவசாயிகள் கண்டன முழக்கமிட்ட நிலையில், போராட்டக் களத்திற்கு வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் அதே இடத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட நடவ டிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை யடுத்து போராட்டம் தற்காலிகமாக கை விடப்பட்டது.