நாகர்கோவில், செப்.12- நாகர்கோவில் மாநகராட்சியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் நடந்தது. நாகர்கோவில் மாநகராட்சி மேயர், ரெ.மகேஷ் தலைமையில் , ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா முன்னிலையில் மக்கள் குறைத்தீர்க்கும் முகாம் நடைப்பெற்றது . மாநகராட்சி அதிகாரிகளும் கலந்து கொண்டனர். முகாமில் மக்களுடைய கோரிக்கை மனுக்கள் வாங்கப்பட்டது, துறைச்சார் அதிகாரிகளிடம் கடந்த காலத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றியம் அதிகாரிகளிடம் கேட்டறிந்து கால தாமதமின்றி மக்கள் கோரிக்கைகள் நிறைவேற்றபட வேண்டும் என அதிகாரிகளுக்கு மேயர் ரெ.மகேஷ் அறிவுறுத்தினார்.