விருதுநகர், அக்.7- விருதுநகர் நகராட்சி யுடன் கூரைக்குண்டு ஊரா ட்சியை இணைக்கும் முடி வை தமிழக அரசு கைவிட வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் ஒன்றியத் துக்கு உட்பட்டது கூரைக் குண்டு ஊராட்சி. இதை விரு துநகர் நகராட்சியுடன் இணைப்பது தொடர் பாக அறிவிப்பு வெளியாகி யுள்ளது. எனவே, கடந்த ஆக.15 சுதந்திர தினம் மற் றும் அக்.2 காந்தி ஜெயந்தி தினத்தில் நடைபெற்ற கிரா மசபையில் இணைக்க கூடாது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இந்நிலையில், விருது நகர் சட்டப் பேரவை உறுப்பி னர் சீனிவாசன் இல்லத்திற்கு கூட்டமாக செல்ல முயன்ற னர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்பு, நடைபெற்ற பேச்சு வார்த்தை யில் கிராம மக்கள் எம்எல்ஏ விடம் கோரிக்கை மனு அளித் தனர். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொது மக்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.