districts

கோழிப்பண்ணைகளை கண்காணிக்க அதிவிரைவுக்குழு அமைப்பு

நாமக்கல், பிப்.19- ஆந்திரா மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் செயல் பட்டு வரும் கோழிப்பண்ணை களை கண்காணிக்க அதிவிரைவுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக, ஆட் சியர் ச.உமா தெரிவித்துள்ளார். பறவைக்காய்ச்சல் தடுப்பு மற் றும் முன்னெச்சரிக்கை நடவடிக் கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம், ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சி யர் ச.உமா, கோழிப்பண்ணை உரி மையாளர்களுக்கு பறவைக் காய்ச் சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி னார். இதன்பின் அவர் பேசுகை யில், பறவைக்காய்ச்சல் நோய் வர விடாமல் தடுக்க கோழிப்பண்ணை யாளர்கள் பண்ணைக்குள் இதர கோழிகள் அல்லது வனப்பறவை கள் நுழைவதை தடுக்க வேண்டும். பண்ணை வேலையாட்கள் கையு றைகள், முகமூடி மற்றும் ரப்பர் காலுறைகள் அணிந்து வேலை செய்ய வேண்டும். பண்ணையாட்கள் வேறு பண் ணைகளுக்கோ, பறவை சரணால யங்களுக்கோ செல்வதை தவிர்க்க  வேண்டும். 15 நாட்களுக்குகொரு முறை பண்ணை வளாகத்தை முற்றி லும் சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளிக்க வேண்டும். நாடு விட்டு  நாடு பறந்து செல்லும் வனப்பறவை கள் பறவைக்காய்ச்சல் நோயைப் பரப்புகின்றன. சந்தையில் இருந்து  கோழிகள் வாங்கி வளர்க்க வேண் டாம். அரசு பண்ணைகளில் இருந்து கோழிக்குஞ்சுகள் வாங்கலாம், என்றார். மேலும், நாமக்கல் மாவட்டத் தில் உள்ள 105 கால்நடை மருந்த கங்கள் மூலம் அந்தந்த பகுதிகளில் 45 நடமாடும் அதிவிரைவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவுக்கு தலா ஒரு கால்நடை மருத்துவர், கால் நடை ஆய்வாளர், 2 கால்நடை பரா மரிப்பு உதவியாளர்கள் இருப்பார் கள். மாவட்டத்தில் அந்தந்த பகுதி யில் உள்ள கோழிப் பண்ணைக ளுக்கு நேரில் சென்று கோழிகளில் பறவைக் காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதா? இறப்புகள் உள்ளதா? கோழிகளை அப்புறப்படுத்த முறை யாக குழிதோண்டப்பட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா? ஆகிய வற்றை ஆய்வு செய்வார்கள். அதி விரைவுக் குழுவினருக்கு கோழிப் பண்ணையாளர்கள் ஒத்துழை்பு அளிக்க வேண்டும், என்றார்.  இதைத்தொடர்ந்து, செவ்வாயன்று  செல்லிபாளையம் பகுதியிலுள்ள கோழிப்பண்ணையில் ஆட்சியர்,  நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.