districts

img

மதுரை மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்க ஆண்டு பேரவை

மதுரை, ஜூன் 9- மதுரை மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள்  சங்கம் (சிஐடியு) 16 - வது ஆண்டு பேரவை  செவ்வாயன்று சிஐடியு மாவட்டக்குழு அலு வலகத்தில் மாவட்டத் தலைவர் இரா. லெனின் தலைமையில் நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா.தெய்வராஜ் துவக்கி வைத்து பேசினார். சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் டி.  சிவக்குமார் வேலை அறிக்கையும், பொரு ளாளர் வி. செந்தில்குமார் வரவு - செலவு அறிக்கையும் சமர்ப்பித்தனர். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் வீ.பிச்சை வாழ்த்தி பேசினார். டாஸ்மாக் ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் கே.  திருச்செல்வன் நிறைவு செய்து சிறப்புரை யாற்றினார். பேரவையில் புதிய மாவட்டத் தலைவ ராக எம். சுந்தர மகாலிங்கம், பொதுச் செய லாளராக டி. சிவக்குமார், பொருளாளராக வி. செந்தில்குமார் உள்ளிட்ட 11 பேர்  கொண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட னர். 19 ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரி யும் டாஸ்மாக் ஊழியர்களை பணி வரன் முறை செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தலைமை அலுவலக சுற்றறிக்கை 2017 - 2018 படி குறிப்பிட்டுள்ள அறிவுரைகளில் படி விற்பனை அடிப்படையில் பணி மாறு தல்களை நடைமுறைப்படுத்த வேண்டும். டாஸ்மாக் கடைகளில் விற்பனை அடிப்ப டையில் ஒரு சதவீதம் பணம் கேட்டு கம்பெனி  எனக் கூறி ஊழியர்களை மிரட்டும் வெளி நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளில் விற்பனையினை முறைபடுத்திட கேஸ் கவுண்டர், சேல்ஸ் கவுண்டர் என இரண்டு பிரிவுகளை உரு வாக்கி பார்கோடிங் பில்லிங் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலி யுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.