மதுரை, மார்ச் 22- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கு வாக்களித்த 23 ஆவது வார்டு மக்களுக்கு நன்றியறிவிப்பு மற்றும் கட்சி யின் மாநில மாநாட்டு நிதிய ளிப்பு தெருமுனைக் கூட்டம் திங்களன்று வடக்கு ஒன்றாம் பகுதிக்குழு தாகூர் நகர் கிளை சார்பில் செல்லூர் தாகூர்நகரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பகுதிக் குழு உறுப்பினர் ஜி. பாலு தலைமை வகித்தார். எம்.கே. முருகானந்தம் , வி.பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே. பொன்னுத்தாய், மாவட்டச் செயலாளர் மா. கணேசன் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். பகுதிக்குழு செயலாளர் வி. கோட்டைச் சாமி, மாவட்டகுழு உறுப்பினர் பி.ராதா, 23 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் டி. குமர வேல், முன்னாள் மாமன்ற உறுப்பினர் க. திலகர் உள்ளிட்ட பலர் பேசினர். இதில் மாநில மாநாட்டு நிதி யாக ஒரு லட்சத்து 10 ஆயி ரம் ரூபாயை மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே. பொன்னுத்தாய், மாவட்ட செயலாளர் மா. கணேசன் ஆகியோரிடம் பகுதிக்குழு சார்பில் வழங்கப்பட்டது.ஜி. இளங்கோவன் நன்றி கூறி னார்.இக்கூட்டத்தில் பகுதி குழு உறுப்பினர் ஆறுமுக பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.