நாமக்கல், நவ.19- சிஐடியு அகில இந்திய மாநாடு சென்னையில் ஜனவரி மாதம் நடைபெறுகிறது. இம்மாநாடு வெற்றி பெற நாமக்கல் மாவட்ட குழுவின் சார்பில் நிதியளிப்பு பேரவை கூட்டம் சிஐடியு மாவட்ட குழு அலுவலகத்தில் நடைபெற்றது . இக்கூட்டத்திற்கு சிஐடியு நாமக்கல் மாவட்டத் தலைவர் பி.சிங்காரம் தலைமை வகித்தார். இப்பேரவைக் கூட்டத் தில் மாநாடு நிதியாக நாமக்கல் மாவட்ட குழுவின் சார்பில் ரூ.1 லட்சத்தை மாநில தலைவர் அ.சவுந்திரராசன் பெற்றுக் கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் மாவட்ட செய லாளர் ந.வேலுசாமி, மாவட்ட பொருளாளர் ஏ.கே.சந்திர சேகரன், மாவட்ட துணை தலைவர் எம்.அசோகன், மாவட்ட துணைச் செயலாளர் கு.சிவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.