திருத்துறைப்பூண்டி, ஆக.29- விடுதலை போராட்ட வீரர் ஹர்கிசன் சிங் சுர்ஜித் நினைவாக தில்லியில் கட்டப்படுகிற நினைவகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்துறைப்பூண்டி நகரக்குழு சார்பில் வியாழன் அன்று தோழர் சிவராமன் நினைவகத்தில் முதல் நிதியாக ரூ.25,000 மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தியிடம் வழங்கப்பட்டது. மாவட்டச் செயற்குழு ஜி.பழனிவேல், கே.தமிழ்மணி, நகரச் செயலாளர் கே.ஜி.ரகுராமன், மாவட்டக்குழு டி.சுப்பிரமணியன், எஸ்.சாமிநாதன், கே.வி.இராஜேந்திரன், நகரக்குழு கு.வேதரெத்தினம், கே.கோபு, ஆர்.எம்.சுப்பிரமணியன், எஸ்.தண்டபாணி, எம்.ஜெயபிரகாஷ், ஏ.கே.செல்வம் மற்றும் வி.ச., நகரக்குழு கார்த்தி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.