districts

img

இராமநாதபுரத்தில்  ஜாக்டோ ஜியோ மாநாடு

இராமநாதபுரம்,பிப்.20- புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சரண்டர் விடுப்பினை மீண்டும் வழங்க வேண்டும். அக விலைப்படி உரிய காலத்தில் வழங்க வேண்டும். தேர்தல்  பிரச்சாரத்தில் அளித்த வாக்குறுதியினை முதலமைச்சர் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இராமநாத புரம் மாவட்டத்தில் ஜாக்டோ ஜியோ சார்பில் வாழ்வாதார கோரிக்கை மாநாடு நடைபெற்றது.  இம்மாநாட்டிற்கு ராஜேஷ் கண்ணன் தலைமை வகித்தார். சிவபாலன், சேகர் ஆகியோர் முன்னிலை வைத்  தனர். பல்வேறு தோழமைச் சங்கங்களின் மாவட்ட பொறுப்பாளர்கள் கோரிக்கைகளை விளக்கிப் வலியு றுத்தி பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில  துணைப்பொதுச்செயலாளர் வாசுகி நிறைவுரையாற்றி னார். செந்தூர் முருகன் நன்றி கூறினார்.