டாக்டர் மன்மோகன் சிங் ஜம்மு-காஷ்மீருக்கு நிறைய செய்துள்ளார். மன்மோகன் சிங்கைப் போல வேறு எந்த பிரதமரும் ஜம்மு-காஷ்மீருக்கு இவ்வளவு நன்மை செய்து இருக்க மாட்டார்கள். ஆனால் அவரது மறைவுக்குப் பிறகு மோதல் நிகழ்வது மிக மோசமானது.
ஒரு மனிதர் இறக்கும் போது, அவர் மீதான பகைமை கலைந்துவிடும். ஆனால் தற்போது அதிலும் அரசியல் செய்யப்படுகிறது. வாஜ்பாய் இறந்தபோது அவருக்கு ராஜ்காட்டில் இடம் ஒதுக்காமல், வேறு இடம் ஒதுக்கப்பட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும்? இது தனிப்பட்ட கட்சி சிக்கல் இல்லை, இந்திய வரலாற்றில் ஏற்பட்டுல்ல சிக்கல்.
மன்மோகன் சிங் போன்ற சிறந்த அரசியல் ஆளுமைக்கு திரையுலகம், விளையாட்டுத் துறை பிரபலங்கள் மரியாதை செலுத்துவதில் இருந்து விலகி மௌனம் காத்தனர். தங்கள் தொழில் பாதுகாப்புக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கும் இந்தப் போலிகளை மக்கள் புகழ்வதை நிறுத்த வேண்டும்
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ரயில்வே பிளாட்பாரத்தில் உறங்கிய அப்பாவி மக்கள் மீது தண்ணீர் ஊற்றி விரட்டுகிறார்கள். இது மனிதாபிமானமற்ற செயல். இந்த உணர்வின்மை வேதனை அளிக்கிறது. ரயில்வே அமைச்சர் இந்த சம்பவத்தை சாதனையாகக் காட்டிக் கொள்வாரா?
மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திங்கள்கிழமை அன்று மீண்டும் திறக்கப்படுகிறது. சபரிமலை கோவிலில் செவ்வாய்கிழமை முதல் மகரவிளக்கு கால பூஜைகள் தொடங்குகின்றன. தொடர்ந்து ஜன.14ஆம் தேதி மகரவிளக்கு பூஜையும் மகரஜோதி தரிசனமும் நடைபெறுகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் 140 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 10 வயது சிறுவன் பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்தார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அஸ்தி யமுனையில் கரைக்கப்பட்டது.
எதிரிகளை வீழ்த்த எச்ஐவி பாதித்த பெண்களை பயன்படுத்தி பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய கர்நாடகா பாஜக எம்எல்ஏ முனி ரத்னாவுக்கு எதிராக 2,481 பக்கத்தில் கர்நாடக காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.