districts

img

மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

சேலம், செப்.7- சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிகாலமாக முறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் வெண்ணிற கொடியேந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையில் பணியாற்றிய சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை முறைப்படுத்தி பணிக்காலமாக ஆணை வழங்க வேண்டும். சாலை பணியாளர் களுக்கு தொழில் நுட்ப கல்வி  திறன் பெறாத ஊழியர்களுக் குரிய ஊதியம் வழங்க வேண் டும். சாலை பணியாளர்களில் இறந்தோரின் வாரிசுகள் கருணை அடிப்படையில் பணி நியமனம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு விரைந்து பணி வழங்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  சேலம், எடப்பாடி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் வெண் ணிற கொடியேந்தி ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங் கத்தின் கோட்ட இணைச்செய லாளர் மு.தங்கராசு தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டச் செயலா ளர் தா.கலைவாணன் அந் தோணி உரையாற்றினார். இதில், கோட்டை இணை செயலாளர் கா.மாரியப்பன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க எடப்பாடி வட்ட செயலாளர் எம்.சந்திரசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவை

இதேபோன்று கோவை கோட்ட பொறியாளர் அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு கோட்ட தலைவர் பி.முருகேசன் தலைமை தாங்கி னார். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் எம்.சாமிநாதன், பொருளாளர் பி.நட ராஜன், இணை செயலாளர் சி.எம்.சக்திவேல், சாலைப்பணி யாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.சிவக்குமார், பொதுச்செயலாளர் ஆர்.ரவி, அரசு ஊழியர் சங்க பொருப்பு தலைவர் சா.ஜெகநாதன் ஆகி யோர் உரையாற்றினர். முடிவில் சாலைப்பணியாளர் சங்க கோட்ட பொருளாளர் ஆர்.மூர்த்தி நன்றி கூறினார்.