districts

img

பொங்கல் சிறப்பு உதவித்தொகை ரூ.5,000 வழங்குக!

சென்னை, டிச.27- பொங்கல் சிறப்பு உத வித்தொகையாக தொழிலா ளிகளுக்கு 5ஆயிரம் ரூபாய்  வழங்கக் கோரி வெள்ளி யன்று (டிச.27) மாநிலம் முழு வதும் கட்டுமான தொழிலா ளர்கள் ஆர்ப்பாட்டம் நடத் தினர். மாத ஓய்வூதியத்தை 1200 ரூபாயிலிருந்து 2 ஆயி ரம் ரூபாயாக உயர்த்த நல  வாரியம் முடிவு செய்துள் ளதை விரைந்து அமல் படுத்த வேண்டும். ஓய்வூதி யத்தை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும்.வாரி யக் கூட்டத்தில் தொழிலா ளர் நலன் மற்றும் திறன்  மேம்பாட்டு துறை அமைச்  சர் அளித்த அறிவுறுத்தல் களை அமலாக்க வேண்டும்  என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி இந்  திய கட்டுமான தொழிலா ளர் சம்மேளனம் (சிஐடியு)  சார்பில் ஆட்சியர் அலுவல கம், நலவாரிய அலுவல கங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்சென்னை, மத்திய சென்னை மாவட்டங்கள் சார்  பில் தி.நகர் உதவி ஆணை யர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா. பாலகிருஷ்ணன், மத்திய சென்னை மாவட்டத் தலை வர் எம்.தயாளன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பேசி னர். இதனை தொடர்ந்து உதவி ஆணையரிடம் மனு அளித்து பேசினர்.