மதுரை, ஜூன் 14- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கம் மதுரை மாநகர் மத்திய 1 ஆம் பகுதிக்குழு (மேலப்பொன் னகரம்) மாநாடு ஞாயிறன்று சிஐடியு மாநகர் மாவட்டக்குழு அலுவலகத்தில் ஏ.வி.வேலு தலைமையில் நடை பெற்றது என். அபிஷேக்பாரதி வரவேற்று பேசினார். மாவட்ட பொறுப்பு செயலா ளர் மாமன்ற உறுப்பினர் டி. குமரவேல் துவக்கி வைத்து பேசினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர். தெய்வராஜ், மாவட்டத் தலைவரும் மாநகராட்சி துணை மேயருமான டி. நாகராஜன், செய லாளர் பி. வீரமணி, மாமன்ற உறுப்பினர் வை.ஜென்னியம்மாள் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பகுதிக்குழு செய லாளர் ஆ.பாலமுருகன் வேலை யறிக்கை சமர்ப்பித்தார். சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பி னர் மா.சுந்தரபாண்டியன் நிறைவுரை யாற்றினார். டி. லட்சுமிஅம்மாள் நன்றி கூறினார். காதுகேளாதோர் அமைப்பு செயலாளர் எம். சொர்ணவேல் உள் ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தலை வராக ஏ.முருகேசன், செயலாளராக ஏ.வி.வேலு, பொருளாளராக மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட 11 பேர் கொண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளி களுக்கு மாத உதவித்தொகை 3 ஆயி ரமாக உயர்த்தி வழங்கிட வேண்டும், கடுமையான மாற்றுத் திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை ரூ. 5 ஆயிரம் வழங்கிட வேண்டும். மதுரை மாவட்டத் தில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் மாற்றுத்திறனாளி அடை யாள அட்டை பெற, ரயில், பஸ், மாத உத வித்தொகை போன்றவைகள் பெறுவ தற்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.